AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்தியாவில் கிளிகளை கொல்லும் வைரஸ் தொற்று கண்டுபிடிப்பு.. பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை!

Parrot Borna Virus Found In India | இந்தியாவில் முதல் முறையாக கிளிகளை கொல்லும் கிளி போர்னா 4 என்ற வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அசாமில் சுமார் 83 பறவைகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சுமார் 44 பறவைகளிடம் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கிளிகளை கொல்லும் வைரஸ் தொற்று கண்டுபிடிப்பு.. பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 14 Jul 2026 23:21 PM IST

சென்னை, ஜூலைம் 14 : இந்தியாவில் (India) கிளி வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிளிகளின் உயிரை பறிக்கும் கிளி போர்னா 4 (Parrot Borna Virus) என்ற வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல் உள்ளிட்டவை உள்ள நிலையில், தற்போது கிளிகளுக்கான இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று ஆபத்தானதா, இது கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கிளிகள் உயிரிழக்க முக்கிய காரணமாக உள்ள கிளி போர்னா வைரஸ்

பொதுவாக கூண்டுகளில் வைத்து வளர்க்கப்படும் கிளிகள் கடுமையான நோய் தொற்றுகளுக்கு உள்ளாகும். சில நேரங்களில் கிளிகளுக்கு ஏற்படும் திடீர் மரணங்களுக்கும் இந்த நோய் தொற்று தான் காரணமாக உள்ளது. இந்த வைரஸ் தொற்று சாதாரண பறவைகளை தாக்குவது இல்லையாம். மாறாக அவை கிளிகள், பஞ்சவர்ணக் கிளிகள், கொண்டைக்கிளிகள், லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட குடும்பங்களை சேர்ந்த பறவைகளை தான் இந்த வைரஸ் பெருமளவு பாதிக்குமாம்.

இதையும் படிங்க : இந்தியா–நியூசிலாந்து உறவில் புதிய அத்தியாயம்.. பண்பாட்டு நல்லுறவுக்கு பாலமாக அமைந்த BAPS அமைப்பு

பிடிடி என்ற ஆபத்தான நோயை ஏற்படுத்தும் கிளி போர்னா

அசாம் விஞ்ஞானிகள் முதல் முறையாக இந்தியாவில் இந்த கிளி போர்னா வைரஸ் தொற்றை கண்டுபிடித்துள்ளனர். கூண்டில் வைத்து வளர்க்கப்படும் கிளிகளை தாக்கும் இந்த வைரஸ், பிடிடி என்ற ஆபத்தான நோயை உண்டாக்குவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது பறவைகளின் செரிமான மற்றும் நரம்பு மண்டலத்தை பாதித்து, அவை உடனே உயிரிழக்க வழிவகை செய்கின்றன.

இதையும் படிங்க : புதிய வாக்காளர்கள் கவனத்துக்கு.. படிவம் 6-இல் இந்த விவரம் சேர்க்க வேண்டும்.. தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

44 பறவைகளுக்கு தொற்று உறுதி

அசாம், கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 83 பறவைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 44 பறவைகளுக்கு இந்த நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்தியர்கள் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow Us