AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்தியா–நியூசிலாந்து உறவில் புதிய அத்தியாயம்.. பண்பாட்டு நல்லுறவுக்கு பாலமாக அமைந்த BAPS அமைப்பு

40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமராக நியூசிலாந்து சென்ற நரேந்திர மோடிக்கு ஆக்லாந்தில் நடைபெற்ற "கியா ஓரா மோடி" நிகழ்ச்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்வில் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனும் பங்கேற்றார்.

இந்தியா–நியூசிலாந்து உறவில் புதிய அத்தியாயம்.. பண்பாட்டு நல்லுறவுக்கு பாலமாக அமைந்த BAPS அமைப்பு
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 13 Jul 2026 17:23 PM IST

ஜூலை 13, 2026: இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டு நாள் அதிகாரப்பூர்வ நியூசிலாந்து பயணத்தின் போது, இந்தியா–நியூசிலாந்து உறவு “மூலோபாய கூட்டாண்மை”  நிலைக்கு உயர்த்தப்பட்டது. மேலும், 2030-ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை ரூ. 35,000 கோடியாக உயர்த்தும் இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது. இந்த முன்னேற்றத்திற்கு பல ஆண்டுகளாக வளர்ந்து வந்த பண்பாட்டு உறவுகள், மத நல்லிணக்கம் மற்றும் மக்களிடையேயான தொடர்புகள் முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் பாப்ஸ் சுவாமிநாராயண் அமைப்பு முக்கிய பங்காற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா–நியூசிலாந்து நட்புறவின் கொண்டாட்டம் – பிரதமர் மோடி:

2023-ஆம் ஆண்டு ஆக்லாந்தில் நடைபெற்ற ஜன்மாஷ்டமி விழாவில், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கிறிஸ்டோபர் லக்சன், இந்திய வம்சாவளியினரின் தன்னலமற்ற சேவையை பாராட்டினார். பின்னர் பிரதமராக பொறுப்பேற்ற பிறகும், 2025-ஆம் ஆண்டு வெலிங்டனில் நடைபெற்ற தீபாவளி விழாவில், இந்திய சமூகத்தின் பண்பாட்டு, சமூக மற்றும் பொருளாதார பங்களிப்பை அவர் பாராட்டினார்.

அதேபோல், 2025 மார்ச் மாதம் இந்தியா வந்த பிரதமர் லக்சன், புதுதில்லியில் உள்ள சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோவிலுக்கு சென்று மரியாதை செலுத்தினார். அப்போது, இந்திய வம்சாவளியினர் நியூசிலாந்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமராக நியூசிலாந்து சென்ற நரேந்திர மோடிக்கு ஆக்லாந்தில் நடைபெற்ற “கியா ஓரா மோடி” நிகழ்ச்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்வில் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனும் பங்கேற்றார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “இது இந்திய வம்சாவளியினரின் நிகழ்ச்சி மட்டுமல்ல; இந்தியா–நியூசிலாந்து நட்புறவின் கொண்டாட்டமாகும்” என்று தெரிவித்தார். மேலும், மாவோரி மக்களின் “வாகா” என்ற பாரம்பரிய படகை குறிப்பிட்டு, அது இரு நாடுகளின் இணைந்த பயணத்தின் அடையாளம் என விளக்கினார்.

பல்துறைகளில் புதிய ஒத்துழைப்பு:

இதுகுறித்து பாப்ஸ் சுவாமிநாராயண் அக்ஷர்தாம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா–நியூசிலாந்து நட்பு, பரஸ்பர புரிதல் மற்றும் தன்னலமற்ற சேவையை வலுப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், இரு நாடுகளின் நட்புறவை தலைமுறைகள் தாண்டி வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் புதிய கட்ட ஒத்துழைப்பை நோக்கி நகரும் நிலையில், பண்பாட்டு உறவுகளும் மக்களிடையேயான தொடர்புகளும் இந்த புதிய மூலோபாய கூட்டாண்மைக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

Follow Us