IND W vs ENG W: 142 ஆண்டு கால வரலாறு! லார்ட்ஸில் இங்கிலாந்து மகளிர் லாக்.. பிரமாண்ட வெற்றியை பெற்ற இந்தியா மகளிர்!
England Women vs India Women One-off Test: 142 ஆண்டுகள் கழித்து, லார்ட்ஸில் மகளிர் அணிகளுக்கு இடையே ஒரு டெஸ்ட் போட்டி நடைபெற்றது. லார்ட்ஸில் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்காக ஒரு மகளிர் அணி 142 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இதன்மூலம், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி இந்த வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளது.
லாட்ர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இங்கிலாந்து மகளிர் மற்றும் இந்தியா மகளிர் (IND W vs ENG W) இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியா மகளிர், சொந்த மண்ணில் இங்கிலாந்து மகளிர் அணியை 270 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. லார்ட்ஸ் மைதானத்தின் 142 ஆண்டு கால வரலாற்றில் நடைபெற்ற முதல் மகளிர் டெஸ்ட் போட்டி இதுவாகும். இதில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய மகளிர் அணி (Indian Women Cricket Team) வரலாறு படைத்தது. போட்டியை நடத்திய இங்கிலாந்து அணிக்கு நான்காவது இன்னிங்ஸில் 457 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது, ஆனால், இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 186 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி 270 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.




பேட்டிங்கில் அசத்திய இந்திய மகளிர் அணி:
A day that goes down in the 𝗵𝗶𝘀𝘁𝗼𝗿𝘆 𝗯𝗼𝗼𝗸𝘀 📚#TeamIndia WIN the first-ever women’s Test match at Lord’s 🥳
Scorecard ▶️ https://t.co/O1rEau8j8n #ENGvIND pic.twitter.com/4mhcx8kKej
— BCCI Women (@BCCIWomen) July 13, 2026
முதல் இன்னிங்ஸில் 115 ரன்கள் என்ற மிகப்பெரிய முன்னிலையை ஏற்படுத்திய பிறகு, இந்திய அணி தங்களது 2வது இன்னிங்ஸை 341 ரன்களில் டிக்ளேர் செய்தது. 457 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இங்கிலாந்து, 3வது நாளில் வெறும் 59 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும், ஏமி ஜோன்ஸ் மற்றும் சோஃபி எக்லெஸ்டோன் ஆகியோர் அரைசதம் அடித்து இங்கிலாந்து அணியின் மோசமான பயணத்திற்கு தடை போட்டனர். ஆனாலும், இந்திய மகளிர் அணியின் அசாத்திய பந்துவீச்சால் இங்கிலாந்து அணியால் 186 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
முதல் இன்னிங்ஸில் இருந்தே ஆதிக்கம்:
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸ் 285 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்ததாக, களமிறங்கிய இங்கிலாந்து அணி வெறும் 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கணிசமான முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி, தங்களது 2வது இன்னிங்ஸில் 341 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் கிராந்தி கவுர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். 115 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணியின் சார்பில், இரண்டாவது இன்னிங்ஸில் யாஸ்திகா பாட்டியா 113 ரன்கள் எடுத்து சதம் அடித்தார். இது அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் முதல் சதம் மற்றும் லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு மகளிர் டெஸ்ட் போட்டியில் அடிக்கப்பட்ட முதல் சதம் ஆகும்.
ALSO READ: கெத்து காட்டும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி.. சாதனை படைத்த யாஸ்திகா பாட்டியா!
142 ஆண்டுகளுக்குப் பிறகு ‘வரலாற்று’ வெற்றி
லார்ட்ஸில் முதல் கிரிக்கெட் போட்டி 1884-ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆண்கள் அணிகளுக்கு இடையேயான அந்தப் போட்டிக்குப் பிறகு 142 ஆண்டுகள் கழித்து, லார்ட்ஸில் மகளிர் அணிகளுக்கு இடையே ஒரு டெஸ்ட் போட்டி நடைபெற்றது. லார்ட்ஸில் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்காக ஒரு மகளிர் அணி 142 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இதன்மூலம், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி இந்த வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளது.