AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்.. 75 ரயில் நிலையங்களை திறந்து வைக்கும் பிரதமர் மோடி..

பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று, மறுசீரமைக்கப்பட்ட ஜலந்தர் கேன்ட் ரயில் நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில் நிலையத்தை மையமாகக் கொண்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நிறைவடைந்துள்ள மற்ற 74 ரயில் நிலையங்களையும் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் திறந்து வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்.. 75 ரயில் நிலையங்களை திறந்து வைக்கும் பிரதமர் மோடி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Jul 2026 08:51 AM IST

ஜூலை 17, 2026: உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட 75 ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் கேன்ட் ரயில் நிலையமும் இடம்பெற்றுள்ளது. இந்திய ரயில்வே வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி ஹரியானா, சண்டிகர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

அப்போது தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே, சுகாதாரம், கல்வி மற்றும் சாலை உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

75 ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணி:

அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ், சுமார் ரூ.1,570 கோடி மொத்த செலவில் இந்த 75 ரயில் நிலையங்களும் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. நவீன பயணிகள் வசதிகள், மேம்படுத்தப்பட்ட காத்திருப்பு அறைகள், சிறந்த நடைமேடை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு நவீன அம்சங்களுடன் இந்த ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 17-ஆம் தேதி ஹரியானா மாநிலம் ஜிந்த் நகரில் இருந்து தொடங்கி வைக்கிறார். அதேநேரத்தில், ஒவ்வொரு பகுதியின் தனித்துவமான உள்ளூர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையிலும் ரயில் நிலையங்களின் கட்டிட வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

75 ரயில் நிலையங்களை திறந்து வைக்கும் பிரதமர் மோடி:


இந்தத் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களில் பஞ்சாபின் ஜலந்தர் கேன்ட் ரயில் நிலையம் முக்கிய இடம் பெற்றுள்ளது. சுமார் 110 ஆண்டுகள் பழமையான இந்த ரயில் நிலையம், ரூ.125 கோடி செலவில் உலகத் தரம் வாய்ந்த நவீன ரயில் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று, மறுசீரமைக்கப்பட்ட ஜலந்தர் கேன்ட் ரயில் நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில் நிலையத்தை மையமாகக் கொண்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நிறைவடைந்துள்ள மற்ற 74 ரயில் நிலையங்களையும் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் திறந்து வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைடெக் சிட்டி ரயில் நிலையம் மேம்பாடு:

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைடெக் சிட்டி ரயில் நிலையமும் அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. ஹைதராபாத் எம்எம்டிஎஸ் ரயில் சேவையில் முக்கியமான பயணிகள் மையமாக விளங்கும் இந்த ரயில் நிலையம், மாநிலத்தின் முக்கிய தகவல் தொழில்நுட்ப மையத்தின் மத்தியில் அமைந்துள்ளது.

சைபர் டவர்ஸ், மைண்ட்ஸ்பேஸ் மற்றும் ஹைடெக் சிட்டி மெட்ரோ ரயில் நிலையம் போன்ற முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து மையங்களுக்கு அருகில் அமைந்துள்ளதால், இந்த ரயில் நிலையம் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு முக்கிய போக்குவரத்து இணைப்பாக உள்ளது. இதன் மறுசீரமைப்பு தெலங்கானா மட்டுமின்றி, நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

முக்கியமாக மறுசீரமைக்கப்பட்ட பிற ரயில் நிலையங்கள்

மகாராஷ்டிராவில் தினசரி 4,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தும் நந்துரா ரயில் நிலையம், டெல்லியில் உள்ள மோடி நகர் ரயில் நிலையம் உள்ளிட்டவையும் இந்தத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், ஒடிசாவின் கேசிங்கா ரயில் நிலையம், ராஜஸ்தானின் ஜெய்சல்மர் மற்றும் தௌசா ரயில் நிலையங்கள், உத்தரப் பிரதேசத்தின் விந்தியாச்சல் ரயில் நிலையம் மற்றும் பாங்கி தாம் ரயில் நிலையம் ஆகியவையும் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு.. 11.21 லட்சம் பேர் தேர்ச்சி.. முடிவுகளை அறிவது எப்படி? இதோ முழு தகவல்!

பாங்கி தாம் ரயில் நிலையம், பஞ்சமுகி ஸ்ரீ ஹனுமான் கோயிலுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு முக்கிய போக்குவரத்து இணைப்பாக விளங்குகிறது.

புதிய தௌலத்பூர் சௌக் – கார்டோலி ரயில் பாதை திறப்பு:

சுமார் ரூ.830 கோடி செலவில் நங்கல் அணை – தல்வாரா – முகேரியன் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டுள்ள புதிய தௌலத்பூர் சௌக் – கார்டோலி ரயில் பாதையையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்த புதிய ரயில் பாதை மூலம் பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் இடையேயான ரயில் இணைப்பு மேலும் மேம்படும். இதன் மூலம் ஹோஷியார்பூர் மற்றும் ஊனா மாவட்ட மக்கள் பயனடைவதுடன், முக்கியமான ஆன்மிகத் தலங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கான போக்குவரத்து வசதியும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ரயில் சேவைகள் தொடக்கம்:

இதனுடன், பஞ்சாப், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களுக்கு இடையேயான ரயில் இணைப்பை மேம்படுத்தும் வகையில் புதிய கார்டோலி – அம்பாலா ரயில் சேவையையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

மேலும், இந்தியாவின் முக்கிய ஆன்மிகத் தலங்களான அமிர்தசரஸ் மற்றும் வாரணாசியை இணைக்கும் வகையில் அமிர்தசரஸ் (சேஹர்தா) – வாரணாசி இடையேயான புதிய ரயில் சேவையும் தொடங்கப்பட உள்ளது. இந்த புதிய ரயில் சேவைகள் வட இந்தியாவின் பயணிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விரைவான மற்றும் வசதியான போக்குவரத்து இணைப்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us