AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Rate: சென்னையில் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து சரிவு.. இன்றைய நிலவரம் என்ன?

ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையில் சற்று சரிவு காணப்படுகிறது. ஜூன் மாத தொடக்கத்தில் ஒரு கிராம் தங்கம் கிட்டத்தட்ட ரூ.16,000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அதன் விலை ரூ.13,000 ஆகக் குறைந்துள்ளது. வரும் நாட்களிலும் தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், மேலும் கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gold Rate: சென்னையில் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து சரிவு.. இன்றைய நிலவரம் என்ன?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Jul 2026 10:41 AM IST

ஜூலை 17, 2026: சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் ரூ.400 குறைந்துள்ளது.

தொடர்ந்து சரிவை கண்டு வரும் தங்கம்:

ஜூலை 17ஆம் தேதியான இன்று, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரத்தில், ஒரு சவரன் தங்கம் ரூ.1,04,000-க்கும், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,291-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,328-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: ஒருவர் எந்த வயதில் எவ்வளவு தங்கம் வைத்திருக்க வேண்டும்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையில் சற்று சரிவு காணப்படுகிறது. ஜூன் மாத தொடக்கத்தில் ஒரு கிராம் தங்கம் கிட்டத்தட்ட ரூ.16,000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அதன் விலை ரூ.13,000 ஆகக் குறைந்துள்ளது. வரும் நாட்களிலும் தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், மேலும் கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வெள்ளி நிலவரம் என்ன?

வெள்ளி விலையைப் பொறுத்தவரையிலும் தொடர்ந்து சரிவு காணப்படுகிறது. அந்த வகையில், ஜூலை 17ஆம் தேதியான இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: பெண்களுக்கு சிறந்த லாபம் தரும் பிரத்யேக அஞ்சலக திட்டங்கள்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

தங்கம் விலையில் ஏன் இந்த மாற்றம்?

ஈரான் போர் தொடங்கியது முதலே தங்கம் விலையில் கடுமையான ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டு வருகின்றன. உலகப் பொருளாதாரத்தில் நிலவும் நிலையற்ற தன்மை, மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையைத் தீர்மானிக்கின்றன. மேலும், முதலீட்டாளர்களின் கவனம் வேறு துறைகளின் பக்கம் திரும்பியுள்ளதன் காரணமாகவும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்து வருவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow Us