AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இதுவரை இல்லாத அளவு உயர்ந்த பண வீக்கம்.. அத்தியாவசிய பொருட்களின் விலை உயரப்போகிறது!

India's Inflation Hiked To 9 87 Percentage | இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்கும்போதெல்லாம் விலைவாசி உயர்வை சந்திக்கும். இந்த நிலையில், இந்தியாவின் பணவீக்கம் முன் எப்போதும் இல்லாத அளவு கடும் உயர்வை சந்தித்துள்ளது, அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை இல்லாத அளவு உயர்ந்த பண வீக்கம்.. அத்தியாவசிய பொருட்களின் விலை உயரப்போகிறது!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Jul 2026 11:47 AM IST

விலைவாசி உயர்வுக்கு பணவீக்கம் (Inflation) முக்கிய காரணமாக உள்ளது. எப்போதேல்லாம் இந்தியாவின் பணவீக்கம் அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம்  அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை சந்திக்கும். இந்த நிலையில், தற்போது அத்தகைய சூழல் தான் உருவாகியுள்ளது. அதாவது, இந்தியாவின் பணவீக்கம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்வை சந்தித்துள்ளது. இது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் பணவீக்கம் குறித்தும், அதனால் சாமானிய மக்கள் சந்திக்கப்போகும் சிக்கல்கள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்த இந்தியாவின் பணவீக்கம்

ஜூலை 14, 2026 அன்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், இந்தியாவின் பணவீக்கம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக கடுமையான உயர்வை சந்தித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு இந்தியாவின் பணவீக்கம் 9.15 சதவீதமாக இருந்த நிலையில், 2026-ல் அது 9.87 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க : இந்தியா மீதான 500% வரியை 100% ஆக குறைத்த அமெரிக்கா.. நிம்மதி பெருமூச்சு!

மொத்த பணவீக்கம் என்றால் என்ன?

பணவீக்கத்தின் தாக்கத்தை குறித்து தெரிந்துக்கொள்வதற்கு முன்னதாக மொத்த பணவீக்கம் என்றால் என்ன என்பது குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. மொத்த பணவீக்கம் என்றால், ஒரு வியாபாரி தனது விற்பனைக்கு தேவையான மொத்த பொருட்களை ஒரு தொழிற்சாலையிடம் இருந்தோ அல்லது விவசாயி இடம் இருந்தோ வாங்குவார். அவருக்கு வழங்கப்படும் விலை தான் இது.

இதையும் படிங்க : செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ.50 லட்சம் பெற எப்படி முதலீடு செய்ய வேண்டும்?

அதாவது மூலப்பொருட்களின் விலை அதிகரிக்கும்போது, வியாபாரிகள் இடம் இருந்து அதிக தொகை வசூலிக்கப்படும். அப்போது அங்கு பணவீக்கம் அதிகரிக்க செய்யும். இந்த விலை உயர்வு வியாபாரியிடம் இருந்து பொதுமக்களுக்கு செல்லும். அதாவது, தனக்கு விலை உயர்த்தி பொருள் வழங்கப்பட்டதன் காரணமாக வியாபாரி, பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் பொருட்களை விலை உயர்த்தி விற்பனை செய்வார். இதனால், பொதுமக்களின் அன்றாட தேவைகளில் மிகப்பெரிய சிக்கல் ஏற்படும்.

உணவு பொருட்களுக்கான பணவீக்கமும் அதிகரிப்பு

உணவு பொருட்களுக்கான பணவீக்க குறியீடு மே மாதம் வெறும் 4.49 சதவீதமாக இருந்தது. ஆனால் அது ஜூன் மாதத்தில் 6.14 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தான் அத்தியாவசிய பொருட்களான வெங்காயம், தங்காளி உள்ளிட்டவை மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us