AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டாஸ்மாக்கில் திடீர் மாற்றம்?.. மதுக்கடைகளைக் குறைத்து ‘ரெஸ்ட்ரோ பார்களை’ அதிகரிக்கத் தமிழக அரசு திட்டம்.. சமூக ஆர்வலர்கள் அச்சம்!!

Restro bars in Tamil Nadu: டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்து, அண்டை மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் மதிப்பு கூட்டு வரியுடன் கூடிய அதிநவீன 'ரெஸ்ட்ரோ பார்களை' (Restro Bars) அதிகரிக்கத் தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ்மாக்கில் திடீர் மாற்றம்?.. மதுக்கடைகளைக் குறைத்து ‘ரெஸ்ட்ரோ பார்களை’ அதிகரிக்கத் தமிழக அரசு திட்டம்.. சமூக ஆர்வலர்கள் அச்சம்!!
மாதிரிப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 17 Jul 2026 10:16 AM IST

சென்னை, ஜூலை 17: தமிழகத்தில் டாஸ்மாக் (TASMAC) நிர்வாகத்தில் மாநில அரசு ஒரு புதிய உத்தேச மாற்றத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்து, அதற்குப் பதிலாக உணவகங்களுடன் கூடிய அதிநவீன ‘ரெஸ்ட்ரோ பார்களின்’ (Restro Bars) எண்ணிக்கையை அதிகரிக்க அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: விஜயபாஸ்கர்களுக்கு சிக்கல்.. சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக அதிமுக வழக்கு.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அரசின் தொடக்கக் கால அதிரடி:

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற இரண்டே நாட்களில், வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் தொலைவிற்குள் இருந்த 717 மதுக்கடைகளை மூட முதலமைச்சர் விஜய் அதிரடியாக உத்தரவிட்டிருந்தார். அரசின் இந்தத் தொடக்கக் கால நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அரசின் தற்போதைய திட்டம்:

தற்போது தமிழகத்தில் மொத்தம் 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி சுமார் 100 கோடி ரூபாய் வரை அரசுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. இந்நிலையில், மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டு, அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருப்பது போல, மதிப்பு கூட்டு வரியுடன் கூடிய அதிநவீன ‘ரெஸ்ட்ரோ பார்களுக்கு’ அனுமதி வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் அரசின் வருவாயை மேலும் பெருக்க முடியும் எனத் தற்காலிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ரெஸ்ட்ரோ பார்கள் என்றால் என்ன?

அதிநவீன வசதிகளுடன், உயர்தர உணவகமும் மது அருந்தும் இடமும் இணைந்து செயல்படும் இடங்களே ‘ரெஸ்ட்ரோ பார்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. சாதாரண பார்களைக் காட்டிலும் இவை அதிக உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டவையாக இருக்கும். அரசின் இந்த புதிய திட்டத்திற்கு ஒரு சாரார் தங்களது பலத்த அதிருப்தியையும் எதிர்ப்பையும் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.

மதுவிலக்கு கொள்கைக்கு எதிரானது:

ஆட்சியின் தொடக்கத்தில் மதுக்கடைகளை மூடி நன்மதிப்பைப் பெற்ற அரசு, தற்போது முழு மதுவிலக்கை நோக்கிச் செல்லாமல், மது அருந்துவதற்கான உட்கட்டமைப்பை நவீனப்படுத்துவது கொள்கை ரீதியாக மதுவிலக்கு கொள்கைக்கு எதிரானது என்று விமர்சிக்கப்படுகிறது.

சமூகப் பழக்கமாக மாறும் அபாயம்:

சாதாரண பார்களுக்குப் பதிலாக சொகுசான ரெஸ்ட்ரோ பார்கள் பயன்பாட்டிற்கு வரும் போது, அது நடுத்தர மற்றும் உயர்தர வர்க்க மக்களைக் கவரக்கூடும். இதனால் மது அருந்துவது என்பது ஒரு ‘சமூகப் பழக்கமாக’ மாறிவிடும் அபாயம் இருப்பதாகச் சமூக ஆர்வலர்கள் கடும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க: நாகர்கோவில் சிறை மரண விவகாரம்.. அரசு நிவாரணங்களை நிராகரித்த குடும்பத்தினர்.. அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி!

அரசின் இந்த உத்தேச முடிவு ஒருபுறம் வருவாயைப் பெருக்க உதவினாலும், மக்கள் மத்தியில் அரசுக்கு இருக்கும் நன்மதிப்பைப் பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Follow Us