AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நீட் தேர்வு முடிவுகள்.. 99.99% மதிப்பெண்களுடன் இந்திய அளவில் தமிழக மாணவர் அசாத்திய சாதனை!

NEET 2026 Results: நீட் மறுதேர்வு முடிவுகளில் தமிழகத்தைச் சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம் 99.99915% மதிப்பெண்களுடன் அகில இந்திய அளவில் 12-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளதோடு, தேசிய டாப்பர் பட்டியலில் ஸ்ரீநிகா, சுடர், வனிஷா சதீஷ் உட்பட 12 தமிழக மாணவர்கள் இடம்பெற்று மாஸ் காட்டியுள்ளனர்.

நீட் தேர்வு முடிவுகள்.. 99.99% மதிப்பெண்களுடன் இந்திய அளவில் தமிழக மாணவர் அசாத்திய சாதனை!
கோப்புப் புகைப்படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 17 Jul 2026 08:50 AM IST

சென்னை, ஜூலை 17: தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET UG) நுழைவு மறுதேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியாகியுள்ளன. இந்தத் தேர்வு முடிவுகளில், ஒவ்வொரு மாநிலத்திலும் முதலிடம் பிடித்த டாப்பர்களின் பட்டியலையும், தேசிய அளவிலான உயர்மதிப்பெண் பட்டியலையும் NTA அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில், வினாத்தாள் கசிவு சர்ச்சைகளுக்குப் பின் நடத்தப்பட்ட இந்த மறுதேர்விலும் தமிழக மாணவர்கள் தங்களது அசாத்திய திறமையால் தேசிய அளவில் முத்திரை பதித்துள்ளனர்.

இதையும் படிக்க: நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு.. 11.21 லட்சம் பேர் தேர்ச்சி.. முடிவுகளை அறிவது எப்படி? இதோ முழு தகவல்!

இந்திய அளவில் தமிழக மாணவனின் சாதனை:

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு டாப்பர் என்ற அடிப்படையில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள 44 பேர் கொண்ட முதன்மை டாப்பர்கள் பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம் என்ற மாணவர் அசாத்திய சாதனை படைத்துள்ளார். பொதுப் பிரிவைச் சேர்ந்த இவர், 99.99915% மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை அசைக்க முடியாதபடி பிடித்துள்ளார். அத்துடன், ஒட்டுமொத்த அகில இந்தியத் தரவரிசையில் 12-வது இடத்தைப் பெற்று ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

புதுச்சேரியிலும் முதலிடம்:

தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியைச் சேர்ந்த கிருஷ்ணந்த் அபினவ் என்ற மாணவர் புதுச்சேரி யூனியன் பிரதேச அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதர பிற்படுத்தப்பட்ட (OBC) பிரிவைச் சேர்ந்த இவர், 99.9721% மதிப்பெண்களைப் பெற்று, அகில இந்தியத் தரவரிசைப் பட்டியலில் 553-வது இடத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

தேசிய டாப்பர் பட்டியலில் 12 தமிழக மாணவர்கள்:

தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள நாடு முழுவதுக்குமான 138 டாப்பர்கள் அடங்கிய உயர்மதிப்பெண் பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த 12 மாணவ-மாணவிகள் இடம்பிடித்து அசத்தியுள்ளனர். இதன் மூலம் கடினமான இந்த மறுதேர்விலும் தமிழகத்தின் மருத்துவக் கனவு மாணவர்கள் பின்தங்கவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. இதில், வெங்கடபதி வேலாயுதம் (மாநில அளவில் முதலிடம், AIR – 12), ஸ்ரீனிகா, சுடர், வனிஷா சதீஷ், சபரி, ஜெய்கிருஷ்ணா, சம்விதா, நவித்தனா, நிகில் சிவானந்தம், ஜனனி ஸ்வேதா, ரோஹித் மேத்யூ ஆகிய 12 தமிழக சாதனையாளர்களின் பெயர்ப்பட்டியல் தேசிய டாப்பர் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

இதையும் படிக்க: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் – லஞ்சமாக பெறப்பட்ட ரூ.5 லட்சம் – சிபிஐ விசாரணையில் அதிர்ச்சி தகவல்

விரைவான மதிப்பீடும், கலந்தாய்வு அறிவிப்பும்:

நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த மறுதேர்வின் முடிவுகள், மருத்துவ சேர்க்கை அட்டவணையில் எவ்விதத் தொய்வும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக NTA-வின் புதிய மற்றும் அதிவேக மதிப்பீட்டு முறையின் மூலம் துரிதமாகத் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுடைய அதிகாரப்பூர்வ மதிப்பெண் அட்டையை நீட் இணையதளத்தில் உடனடியாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், அடுத்தகட்ட மருத்துவக் கலந்தாய்விற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us