குரூப் 1 முதன்மை தேர்வு தேதியில் மாற்றம்.. செப். 27ஆம் தேதி நடக்கும் என அறிவிப்பு..
TNPSC Group 1 Exam: குரூப் 1 முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 30ஆம் தேதி தொடங்கி, ஜூலை 29ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
ஜூலை 17, 2026: தமிழகத்தில் உயர் பதவிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குரூப் 1 பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 1க்கான அறிவிப்பு கடந்த ஜூலை 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வில் துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான பணியிடங்கள் இடம்பெறும்.
குரூப் 1 முதன்மை தேர்வு தேதியில் மாற்றம்:
இந்த அறிவிப்பின்படி, குரூப் 1 முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 30ஆம் தேதி தொடங்கி, ஜூலை 29ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது
மேலும் படிக்க: பழனி முருகன் கோயில் நில முறைகேடு.. அதிரடி விசாரணைக்கு 3 பேர் கொண்ட குழு அமைப்பு!
இந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெற இருந்த குரூப் 1 முதல்நிலைத் தேர்வு, தற்போது செப்டம்பர் 27ஆம் தேதி முன்பகலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்.27 ஆம் தேதி நடைபெறும் தேர்வு:
— TNPSC (@TNPSC_Office) July 16, 2026
இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த ஜூலை 23ஆம் தேதி வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 1 அறிவிக்கையில் முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்தத் தேர்வு செப்டம்பர் 27ஆம் தேதி முன்பகலில் நடைபெறும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: “மேகதாதுவுக்கு எதிராக எம்.பிக்கள் குரல் கொடுப்பார்கள்”.. லண்டனில் இருந்து ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்.. திமுக எம்.பிக்கள் அதிரடி ஆக்ஷன்!
குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள், தேர்வு தேதியில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப தங்களது தேர்வு தயாரிப்புகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வுக்கான ஹால் டிக்கெட், தேர்வு மையம் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் பின்னர் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.