AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

4 மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை.. 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை..

வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜூலை 17ஆம் தேதியான இன்று கரூர், ஈரோடு, தூத்துக்குடி மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை.. 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Jul 2026 06:25 AM IST

ஜூலை 17, 2026: தமிழகத்தில் கடந்த இரண்டு, மூன்று நாட்களாகவே வெப்பநிலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது.  அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல், வேலூரில் 39.3 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 39.6 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூரில் 38 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 39.1 டிகிரி செல்சியஸ், நாகப்பட்டினத்தில் 38.2 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 38 டிகிரி செல்சியஸ் மற்றும் கடலூரில் 39.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 39.9 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 38.8 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

4 மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை:

வரும் நாட்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது எனவும், ஒரு சில இடங்களில் மட்டும் வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜூலை 17ஆம் தேதியான இன்று கரூர், ஈரோடு, தூத்துக்குடி மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மத்திய அரசு ஒப்புதல் கிடைத்தும் தாமதம்.. பட்ஜெட் தாக்கலை தள்ளிப்போடும் முதல்வர்.. என்ன காரணம்!

அதேபோல், அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் நிலவும் சூழலில், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெப்பம் சார்ந்த அசௌகரியங்கள் ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: திருமணமான 5 மாதத்தில் விபரீதம்.. தூக்கில் பிணமாக தொங்கிய மருத்துவ மாணவி.. மதுரை போலீசார் தீவிர விசாரணை!

இதற்கிடையில், மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கும், பலத்த காற்றுக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் ஜூலை 22ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us