கோவையில் அதிர்ச்சி.. ஆட்டுக்கு பாலியல் தொல்லை.. மேற்கு வங்க வாலிபர் அதிரடி கைது!
Coimbatore Youth Arrested : கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆட்டுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இளைஞரை கவுண்டம்பாளையம் போலீசார் விலக்கு வதை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர் .
கோயம்புத்தூர் மாவட்டம், கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மருதாசலம். இவரது மகன் சதீஷ் குமார் ( 54 வயது). இவர், தனது வீட்டின் கீழ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொட்டகையில் சுமார் 10 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று மாலை இவரது வீட்டின் அருகே உள்ள முள்புதர் பகுதியில் ஆடு வித்தியாசமாக கத்திக் கொண்டிருந்தது. இதை கேட்ட சதீஷ்குமார் முள் புதூர் பகுதியில் சென்று பார்த்தார். அப்போது அந்த தெருவில் கட்டிட வேலை பார்த்து வந்த ஒருவர் ஆட்டை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த நபரிடம் சதீஷ்குமார் சத்தம் போட்டார். இதில், அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சதீஷ்குமாரை கீழே கடந்த கல் உள்ளிட்ட பொருட்களால் அடிக்க முயன்றார்.
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த இளைஞர்
தொடர்ந்து, அந்த பகுதியில் இருந்தவர்கள் ஒன்று சேரவே, அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். உடனே, கிராம மக்கள் அந்த நபரை விரட்டி பிடித்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் தாஸ் என்பவரது மகன் கோபிந்தோ தாஸ் ( 35 வயது) என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, கவுண்டம்பாளையம் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபிந்தோ தாசை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
மேலும் படிக்க: உணவு கொடுக்காததால் ஆத்திரம்.. குத்தூசியால் மனைவியை குத்தி கொன்ற கணவர்.. திருச்சியில் கொடூரம்!




விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு
அங்கு, அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, அவர் மீது விலங்குகள் வதை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கோவையில், கால்நடைக்கு வெளிமாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை அளித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் நிகழ்ந்து கீழ்த்தரமான செயல்
தமிழகத்தில் அண்மைக்காலமாக பெண்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பல்வேறு பாலியல் குற்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனை தடுப்பதற்கு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது ஒரு புறம் இருந்தாலும், கால்நடைகளிடம் கீழ்த்தரமான செயலில் இளைஞர் ஒருவர் ஈடுபட்ட சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: காலையில் துள்ளி குதித்து பள்ளி சென்ற மாணவன்.. மாலையில் பிணமாக வீடு திரும்பினார்.. கள்ளக்குறிச்சியில் சோகமான நிகழ்வு!