IndvsEng கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி – இங்கிலாந்துக்கு 234 ரன்கள் இலக்கு
இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 234 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. கார்டிஃபில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அது குறித்து விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்
இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 234 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. கார்டிஃபில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இந்த நிலையில் முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு சிறப்பான துவக்கமாக அமைந்தது. ரோகித் சர்மா 26 ரன்களுடனும், சுப்மன் கில் 31 ரன்களுடனும் ஆட்டமிழக்க அதிரடியாக விளையாடிய விராட் கோலி 8 பவுண்டரிகளுடன் 66 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார்.
கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி
கோலியுடன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை நிதானமாக உயர்த்தினார். ஒரு கட்டத்தில் விராட் கோலி தனது விக்கெட்டை பறிகொடுத்ததும் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் தனியாக போராடினார். மற்றொரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. கடைசியில் ஜஸ்பிரித் பும்ரா அதிரடியாக ஆடி 13 பந்துகளில் 3 பவுண்டரிகள், 1 சிக்சர் என 20 ரன்கள் அடித்தார். இதனால் இந்திய அணி 44 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.
விராட் கோலியின் சாதனைகள்
இந்தப் போட்டியில் 66 பந்துகளில் 65 ரன்கள் குவித்த கோலி, மேற்கிந்திய தீவுகள் அணியின் பிரபல வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் படைத்திருந்த சாதனையை சமன் செய்ததுடன், இந்திய முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டின் நீண்டகால சாதனையையும் முறியடித்தார்.
இங்கிலாந்துக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் ஏமாற்றிய விராட் கோலி, ஜூலை 15, 2026 இன்று நடைபெற்ற 2வது போட்டியில் தனது வழக்கமான அதிரடி பாதைக்கு திரும்பினார். 66 பந்துகளில் 8 பவுண்டரிகள் உட்பட 65 ரன்கள் குவித்தார். இது இங்கிலாந்து அணிக்கு எதிராக அவரது 14வது அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம், இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக முறை அரைசதம் அடித்த வீரர் என்ற ரிச்சர்ட்ஸின் சாதனையை சமன் செய்தார்.
இங்கிலாந்துக்கு எதிராக அதிக அரை சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் முன்னாள் இலங்கை வீரர் குமார் சங்ககரா 15 அரை சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த 2வது இடத்தில் 14 அரை சதங்களுடன் விவ் ரிச்சர்ட்ஸ் மற்றும் விராட் கோலி உள்ளனர். இந்த நிலையில் 3வது ஒரு போட்டியில் அரை சதம் அடித்தால் அவர் குமார் சங்ககராவின் சாதனையை அவர் முறியடிக்க வாய்ப்பிருக்கிறது.