AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IndvsEng : ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்து வரலாறு படைப்பாரா விராட் கோலி?

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வெறும் 4 ரன்கள் எடுத்தால், ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்து வரலாறு படைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

IndvsEng : ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்து வரலாறு படைப்பாரா விராட் கோலி?
விராட் கோலி
Karthikeyan S
Karthikeyan S | Published: 16 Jul 2026 16:05 PM IST

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வெறும் 4 ரன்கள் எடுத்தால், ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்து வரலாறு படைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது போட்டி கார்ஃபிடில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் வென்ற இந்திய அணி நம்பிக்கையுடன் ஜூலை 16, 2026 இன்று நடைபெறும் 2வது போட்டியில் நம்பிக்கையுடன் களமிறங்க காத்திருக்கிறது. இந்தப் போட்டியில் வென்று டி20 தொடரில் அடைந்த மோசமான தோல்விக்கு பதிலளிக்க காத்திருக்கிறது.

ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்து வரலாறு படைப்பாரா விராட் கோலி?

இந்த நிலையில் இந்தப் போட்டியில் களமிறங்கும் விராட் கோலி வெறும் 4 ரன்கள் எடுத்தால், சர்வதே கிரிக்கெட்டில் இங்கிலாந்தில் நடைபெறும் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை அவர் படைப்பார். இந்தப் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் வீராட் கோலி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : CSK New Coach: தோனி கையில் சிஎஸ்கே பயிற்சியாளர் தேர்வு.. உற்றுநோக்கும் ரசிகர்கள்..!

இங்கிலாந்து மண்ணில் இந்திய வீரர் விராட் கோலி அனைத்து ஃபார்மட்களிலும் சேர்த்து 58 போட்டிகளில் விளையாடி 2, 642 ரன்கள் குவித்துள்ளார். இந்த நிலையில் தி வால் என ரசிகர்களால் அழைக்கப்படும் முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட் இங்கிலாந்து மண்ணில் 46 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 2, 645 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். இந்த நிலையில் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடிக்க அவருக்கு 4 ரன்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள்

1.ராகுல் டிராவிட் – 2645 ரன்கள்
2. விராட் கோலி -2642 ரன்கள்
3. சச்சின் டெண்டுல்கர் – 2626 ரன்கள்
4. ரோஹித் சர்மா – 2298 ரன்கள்

காயம் காரணமாக ஓய்வில் இருந்த விராட் கோலி, கடந்த பர்மிக்காமில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். அவரது அதிரடியான ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் அவர் வெறும் 5 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இருப்பினும் மற்ற வீரர்கள் கைகொடுக்க சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : IND vs ENG 2nd ODI: இந்திய அணியின் கேப்டனும் மாற்றம்.. நேரமும் மாற்றம்! ஏன் தெரியுமா..?

ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா ஆதிக்கம்

அதே நேரம் ஒருநாள் போட்டிகளை வைத்து பார்க்கும்போது ரோகித் சர்மா 1439 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 1354 ரன்களுடன் 2வது இடத்தில் உள்ளார். இதற்கிடையில் ஜூலை 16, 2026 இன்று நடைபெறும் 2வது போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா தொடரை வெல்ல வாய்ப்பிருக்கிறது. இது டி20 தொடரில் ஏற்பட்ட படுதோல்விக்கு பதிலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us