AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மதுப்பிரியர்களுக்கு டபுள் தமாக்கா.. டாஸ்மாக்கில் 54 புதிய ரக மதுபானங்கள்.. என்னென்ன தெரியுமா!

Tamil Nadu TASMAC Premium Liquor: தமிழகத்தில் டாஸ்மாக்கில் 51 வகையான உயர் ரக மதுபானங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், என்னென்ன மதுபானங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன என்பது குறித்த முழு விவரத்தை விரிவாக பார்க்கலாம்.

மதுப்பிரியர்களுக்கு டபுள் தமாக்கா.. டாஸ்மாக்கில் 54 புதிய ரக மதுபானங்கள்.. என்னென்ன தெரியுமா!
டாஸ்மாக்கில் 54 வகை உயர் ரக மதுபானம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 16 Jul 2026 20:25 PM IST

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மறுசீரமைக்கும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, டாஸ்மாக் கடைகளில் உயர் ரக மதுபானங்களை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் தீவிரப் படுத்தி உள்ளது. இதில், அதிக அளவில் தரமான இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் கடைகளில் 54 வகையான புதிய மதுபானங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன. இதில்,

  1. ஸ்காட்ச் விஸ்கி.
  2. ஒயின்.
  3. வோட்கா.
  4. ஜின்.
  5. ரம்.
  6. பிரீமியம் பீர்.
  7. பீரா பிளாண்ட்.
  8. பீரா ஒயிட்.
  9. பீரா கோல்டு
  10. லோன் ஷல்ப்

மேலும் படிக்க: திருமணமான 5 மாதத்தில் விபரீதம்.. தூக்கில் பிணமாக தொங்கிய மருத்துவ மாணவி.. மதுரை போலீசார் தீவிர விசாரணை!

54 வகையான மதுபானங்கள் விற்பனை

உள்ளிட்ட 54 வகையான வெளி மாநில மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்கள் கூடுதலாக விற்பனை செய்யப்பட உள்ளது. இருப்பினும், இறுதி ஒப்புதல் பெற்ற பிராண்டுகளின் பட்டியல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: புதிய மதுபான பிராண்டுகள் அறிமுகம் செய்வதன் வாயிலாக நுகர்வோர்களுக்கு அவர்கள் விரும்பும் வகையிலான மதுபானங்கள் பலவற்றை தேர்வு செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. மதுபான சந்தையில் போட்டியை அதிகரிப்பதும் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என்று தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் விற்பனைக்கு வரும்

புதிய மதுபான பிராண்டுகளின் இறுதிப்பட்டியல் விரைவில் வெளியிடப்பட்டு, அதைத் தொடர்ந்து படிப்படியாக மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. தற்போது, தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் 100- க்கும் மேற்பட்ட மதுபான பிராண்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட சில பிராண்டுகளுக்கு மட்டுமே நுகர்வோர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. அதே வேளையில், பிற மாநிலங்களில் விற்பனையாகும் பல பிரபலமான பீர் மற்றும் மதுபான வகைகள் தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை.

புதிய மதுபான பிராண்டுகள் விற்பனை

இதன் காரணமாகவே, சண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பலரும் செல்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையை மாற்றுவதற்காக சந்தை தேவையை ஆய்வு செய்ததுடன், நுகர்வோர்களின் விருப்பங்களையும் கருத்தில் கொண்டு கூடுதலாக 54 வகையான புதிய பிராண்டுகளை அறிமுகம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதில், ஹலால் வரி விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட தயாராக உள்ள நிறுவனங்களின் புதிய மதுபான பிராண்டுகளை டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் படிக்க: காலையில் துள்ளி குதித்து பள்ளி சென்ற மாணவன்.. மாலையில் பிணமாக வீடு திரும்பினார்.. கள்ளக்குறிச்சியில் சோகமான நிகழ்வு!

Follow Us