AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நவீன வசதிகளுடன் சென்னையின் பூங்கா ரயில் நிலையம் – நாளை திறந்து வைக்கும் பிரதமர் மோடி

மத்திய அரசின் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையின் மிக முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான சென்னை பூங்கா ரயில் நிலையம் ரூ.14.79 கோடியில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவிருக்கிறார்.

நவீன வசதிகளுடன் சென்னையின் பூங்கா ரயில் நிலையம்  – நாளை திறந்து வைக்கும் பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Karthikeyan S
Karthikeyan S | Published: 16 Jul 2026 20:13 PM IST

சென்னை, ஜூலை 16 : மத்திய அரசின் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையின் மிக முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான சென்னை பூங்கா ரயில் நிலையம் ரூ.14.79 கோடியில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட சென்னை பூங்கா ரயில் நிலையத்தை பிரதமர் மோடி மக்கள் பயன்பாட்டுக்காக ஜூலை 17, 2026 நாளை மக்கள் பயன்பாட்டுக்காக காணொலி வாயிலாக திறந்து வைக்கவிருக்கிறார். சென்னை பூங்கா ரயில் நிலையம் மட்டுமல்லாமல் நாடுமுழுவதும் 75 ரயில் நிலையங்களை ஒரே நேரத்தில் காணொலி வாயிலாக திறந்து வைக்கவிருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

புதுப்பொலிவுடன் சென்னை பூங்கா ரயில் நிலையம்

தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் சென்னையின் மிக முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான சென்னை பூங்கா ரயில் நிலையம் விளங்குகிறது. இந்த நிலையில் இந்த நிலையில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் விதமாக ரூ.14.79 கோடி செலவில் நவீனமயமாக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : பாஜகவுடன் கூட்டணி அமைக்க திமுக- அதிமுக முயற்சி.. 4 மத்திய அமைச்சர் பதவிகளை பெறவும் திட்டம்.. நிர்மல் குமார் குற்றச்சாட்டு!

அந்த வகையில் இந்த ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிகளுக்காக பல்வேறு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் சீரமைக்கப்பட்டு நவீன வசதிகளுடன் புதிய நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கேனோபி மற்றும லேண்ட்மார்க் டவர் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் முன்பதிவு அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கான விரிவான காத்திருப்பு பகுதி மற்றும் புதிதாக சீரமைக்கப்பட்ட நடைமேடைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கூடுதல் மேற்கூரை வசதிகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் நடைமேடைக்கு செல்ல மேலும் 2 லிஃப்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சென்னை எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்துடன் இணைக்கும் வகையில் தனி நடை பாதை அமைக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : பாமகவில் மீண்டும் பூகம்பம்.. அன்புமணிக்கு எதிராக அருள் தரப்பினர் போர்க்கொடி!

நாடும் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் உலக தரத்தில் மேம்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட மத்திய அரசின் அமித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் இந்த ரயில் நிலையம் சீரமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பயணிகளின் பாதுகாப்பு, தூய்மை, எளிமையாக அணுகல் வசதி போன்றவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது.

மேலும் சென்னை பூங்கா ரயில் நிலையத்துடன் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 75 ரயில் நிலையங்களை காணொலி வாயிலாக ஜூலை 17, 2026 நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us