Gold Price : மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு.. இன்றைய நிலவரம்!
Gold Price Hiked and Silver Price Remain Same | சென்னையில் இன்று தங்கம் விலை உயர்வை சந்தித்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஜூலை 18 : தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஜூன் மாதம் தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம், ஜூலை மாதத்தில் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஜூலை 18, 2026) தங்கம் விலை உயர்வை சந்தித்துள்ளது. அதாவது, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் (Silver Price) மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம்
2026, ஜுன் மாதம் தங்கம் விலை மிக கடுமையான சரிவை சந்தித்தது. அதாவது, ஜனவரி மாதம் ரூ.16,000-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம், ரூ.13,000 வரை சரிவை சந்தித்தது. இந்த நிலையில், ஜூலை மாதம் தொடங்கியது முதல் தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இருப்பினும் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,000-க்கு கீழ் செல்லாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று உயர்வை சந்தித்துள்ளது.
இதையும் படிங்க : பணம் உஷார்.. ஏடிஎம் யூஸ் பண்ணுவீங்களா? இதையெல்லாம் கவனிக்க மறக்காதீங்க!!
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,135-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2,35,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.