AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரூ.250-ல் தொழில் தொடங்கி சாதித்த கேரள தம்பதி.. ரூ.80-90 லட்சம் ஆண்டு வருமானம்!

Kerala Couple's Mushroom Business | கேரளாவை சேர்ந்த தம்பதி இருவர் வெறும் ரூ.250-ல் சொந்தமாக காலான் தொழில் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் தான், அவர்கள் படிப்படியாக தங்களது தொழிலை மேம்படுத்தி தற்போது சுமார் ரூ.80- 90 லட்சம் வருமானம் ஈட்டும் நிறுவனத்தை கட்டமைத்துள்ளனர்.

ரூ.250-ல் தொழில் தொடங்கி சாதித்த கேரள தம்பதி.. ரூ.80-90 லட்சம் ஆண்டு வருமானம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 26 Oct 2026 23:50 PM IST

பலரும் வேலைக்கு செல்வதை விடவும், ஏதேனும் ஒரு சொந்த தொழிலை தொடங்கி அதன் மூலம் வாழ்க்கையை நடத்தினால் போதும் என்ற எண்ணத்தில் இருப்பர். அதன்படி, ஒரு சிறிய தொழிலை தொடங்கி அதன் மூலம் தங்களது வாழ்க்கையை நடத்துவர். அந்த வகையில் தான், தங்களது வாழ்வாதாரத்திற்காக வெறும் ரூ.250-ல் தொழிலை தொடங்கிய கேரள தம்பதியினர், தற்போது ஆண்டுக்கு ரூ.80 முதல் ரூ.90 லட்சம் வரை வருமானம் ஈட்டுகின்றனர். இந்த நிலையில், யார் இந்த கேரள தம்பதி, அவர்கள் எப்படி இத்தகைய மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினர் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரூ.250-ல் தொழில் தொடங்கி சாதித்த கேரள தம்பதி

கேரள மாநிலத்தை சேர்ந்த சிஜே மற்றும் அவருடைய கணவர் தங்கச்சன் ஆகிய இருவரும் இணைந்து 2007 ஆம் ஆண்டு தொழில் செய்ய வேண்டும் என்ற முடிவில் வெறும் ரூ.250 முதலீட்டில் தங்கள் வீட்டில் காலான் பெட்களை அமைத்துள்ளனர். அவர்கள் தாங்கம் மேற்கொண்ட அந்த முயற்சியை நாளுக்கு நாள் படிப்படியாக உயர்த்தி வந்துள்ளனர். பின்னர் 2009 ஆம் ஆண்டு காளான் பண்ணைக்கு Coon Fresh என்று பெயரிட்டுள்ளனர்.

இதையும் படிங்க : Gold Price : ஒரே நாளில் ரூ.1,400 சரிவை சந்தித்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?

6,000 வரை விரிவடைந்த காளான் பெட்கள்

இந்த தம்பதியினர் வெறும் 5 காளான பெட்களுடன் தங்களது தொழிலை தொடங்கியுள்ளனர். அது நாளடைவில் சுமார் 6,000 காளான் பெட்களாக அதிகரித்துள்ளன. இவ்வாறு, அவர்கள் தங்களது தொழிலில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்த நிலையில், தற்போது அவர்கள் ஆண்டுக்கு சுமார் 12 டன் காளான்களை உற்பத்தி செய்கின்றனர். அவர்கள், காளான் வளர்ப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் வேறு சில தொழில்களையும் செய்து வந்துள்ளனர்.

இதையும் படிங்க : ரயில்வேயில் 1,688 காலிப்பணியிடங்கள்.. பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!- கடைசி தேதி எப்போது?

இவர்கள் தாங்கள் செய்யும் இந்த தொழிலை மற்றவர்களும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பயிற்சிகளையும் வழங்க தொடங்கியுள்ளனர். மாணவர்கள், விவசாயிகள் என இதுவரை சுமார் 10,000 பேருக்கு இவர்கள் பயிற்சி வழங்கியுள்ளனர். அதன் மூலமும் அவர்கள் வருமானம் ஈட்டி வருகின்றனர். தற்போது ஆண்டுக்கு ரூ.80 லட்சம் முதல் ரூ.90 லட்சம் வரை வருமானம் ஈட்டும் இவர்கள் அடுத்த இலக்காக ரூ.1.6 கோடி வருமானம் ஈட்ட இலக்கை நிர்ணயம் செய்துள்ளனர்.

Follow Us