ரயில்வேயில் 1,688 காலிப்பணியிடங்கள்.. பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!- கடைசி தேதி எப்போது?
Indian Railways Recruitment 2026 : இந்திய ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரயில் சேர்ப்பு வாரியம் அறிவிப்பின்படி, பட்டப்படிப்பு தேவையில்லாத இளநிலைப் பிரிவில் மொத்தம் 1,688 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயில் பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்காக தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் சார்பில், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான 1,688 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 2026 நவம்பர் 13 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பணியில் (Central Government Job) சேர விரும்பும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
ரயில்வேயில் 1,688 காலிப்பணியிடங்கள்
இந்திய ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரயில் சேர்ப்பு வாரியம் அறிவிப்பின்படி, பட்டப்படிப்பு தேவையில்லாத இளநிலைப் பிரிவில் மொத்தம் 1,688 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பில் டிக்கெட் கிளார்க், அக்கவுண்ட்ஸ் கிளார்க், ஜூனியர் கிளார்க் மற்றும் டிரெயின்ஸ் கிளார்க் உள்ளிட்ட பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி, வணிக மற்றும் டிக்கெட் எழுத்தர் பணிக்கு 700 இடங்களும், கணக்கு எழுத்தர் மற்றும் தட்டச்சர் பணிக்கு 200 இடங்களும், இளநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர் பணிக்கு 600 இடங்களும், ரயில் எழுத்தர் பணிக்கு 188 இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.




இதையும் படிக்க : Home Loan வாங்க போறீங்களா?.. இவற்றை கவனத்தில் கொள்ளுங்கள்.. லட்சங்களை சேமிக்கலாம்!
கல்வித் தகுதி என்ன?
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி முறையில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுவாக பிளஸ் 2 பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் உள்ளிட்ட குறிப்பிட்ட விண்ணப்பதாரர்களுக்கு இந்த மதிப்பெண் நிபந்தனையில் விதிவிலக்குகள் வழங்கப்படுகின்றன.
வயது வரம்பு எவ்வளவு?
ரயில்வே வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது 2027ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியின்படி கணக்கிடப்படும். அதன்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்களாகவும், அதிகபட்சம் 30 வயதுக்குள் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். இருப்பினும், மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிற தகுதியான பிரிவினருக்கும் விதிகளின்படி வயது தளர்வு பொருந்தும்.
மாதச் சம்பளம் எவ்வளவு கிடைக்கும்?
ரயில்வேயில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் பணியமர்த்தப்படும் பதவியைப் பொறுத்து மாத அடிப்படைச் சம்பளம் வழங்கப்படும். வணிக மற்றும் டிக்கெட் எழுத்தர் பணிக்கு மாத அடிப்படைச் சம்பளமாக ரூ.21,700 வழங்கப்படும். கணக்கு எழுத்தர் மற்றும் தட்டச்சர், இளநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர் மற்றும்டிரெயின்ஸ் கிளார்க் ஆகிய பணிகளுக்கு ரூ.19,900 அடிப்படைச் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட இதர படிகளும் பொருந்தக்கூடிய விதிகளின்படி வழங்கப்படும்.
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினர் உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் குறிப்பிட்ட தகுதியான பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250 ஆகும். முதல் கட்ட கணினி வழித் தேர்வில் பங்கேற்ற பின்னர், விதிமுறைகளின்படி பொதுப் பிரிவினருக்கு ரூ.400 மற்றும் சலுகைப் பிரிவினருக்கு ரூ.250 திருப்பி வழங்கப்படும்.
இதையும் படிக்க : ராயல் என்ஃபீல்டின் நிறம் மாறும் பைக்.. 125 பேர் மட்டுமே வாங்க முடியும்? ஏன் இந்த ஸ்பெஷல்?
விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது?
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் அறிவிப்பின்படி, ஆன்லைனில் விண்ணப்பிக்க 2026 நவம்பர் 13ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பக் கட்டணத்தை நவம்பர் 15ஆம் தேதி வரை செலுத்தலாம். விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால், நவம்பர் 16 முதல் 25ஆம் தேதி வரை திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
இந்திய ரயில்வே வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.rrbapply.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பைத் தேர்வு செய்து, விண்ணப்பப் பதிவை மேற்கொள்ள வேண்டும். பின்னர் பெயர், பிறந்த தேதி, கல்வித் தகுதி, முகவரி உள்ளிட்ட தேவையான விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து, புகைப்படம் மற்றும் தேவையான சான்றிதழ்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளின்படி பதிவேற்றம் செய்து, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, அதன் நகலைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்வது அவசியமாகும்.