AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இனி ரயிலில் சத்தமாக பாட்டு கேட்டால் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.. தெற்கு ரயில்வே அதிரடி..

தற்போதைய அறிவுறுத்தலில், 2026ஆம் ஆண்டின் ஜன விஸ்வாஸ் சட்டத் திருத்தத்தின் மூலம் மாற்றியமைக்கப்பட்ட ரயில்வே சட்டம் 145 குறிப்பிடப்பட்டுள்ளது. ரயில்வே வளாகத்தில் தொந்தரவு ஏற்படுத்துதல், முறையற்ற நடத்தை மற்றும் ரயில்வே வசதிகளில் வேண்டுமென்றே குறுக்கிடுதல் போன்ற செயல்களுக்கு எதிராக இச்சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.

இனி ரயிலில் சத்தமாக பாட்டு கேட்டால் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.. தெற்கு ரயில்வே அதிரடி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 19 Oct 2026 17:06 PM IST

அக்டோபர் 19, 2026: ரயில் பயணத்தின்போது செல்போனில் அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்பது, வீடியோக்களைப் பார்ப்பது மற்றும் சத்தமாகப் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர்களுக்கு ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். எச்சரிக்கைக்குப் பிறகும் தொடர்ந்து தொந்தரவு செய்தால், 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமை அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிவுறுத்தலில், ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் செல்போன் ஸ்பீக்கர்கள் மூலம் அதிக சத்தத்தில் இசை மற்றும் வீடியோக்களை ஒலிபரப்புவது மற்ற பயணிகளின் பயணத்திற்கும் ஓய்வுக்கும் இடையூறாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகளை வெளியிடவும், அறிவிப்புப் பலகைகளை வைக்கவும் தெற்கு ரயில்வே தனது கோட்டங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் இந்தி, ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநில மொழிகளில் வெளியிடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், செல்போன்களில் பாடல்கள் மற்றும் வீடியோக்களைக் கேட்கும்போது ஹெட்போன்களைப் பயன்படுத்துமாறும், மற்ற பயணிகளின் வசதியைக் கருத்தில் கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மருத்துவ சிகிச்சைக்காக சொத்துக்களை விற்க வேண்டுமா? ‘இடைப்பட்ட வருமானம்’ என்பதன் பின்னணி கதை

ரயில்வே சட்டம் 145 என்ன சொல்கிறது?

கடந்த 2012ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவுறுத்தலிலும், செல்போன்களில் சத்தமாகப் பேசுவது, அதிக ஒலியில் ரிங்டோன்களை வைப்பது போன்ற செயல்களைத் தவிர்க்குமாறு பயணிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. குறிப்பாக, குளிர்சாதன வசதியுள்ள பெட்டிகளில் இதுபோன்ற செயல்கள் மற்றவர்களுக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டது.

தற்போதைய அறிவுறுத்தலில், 2026ஆம் ஆண்டின் ஜன விஸ்வாஸ் சட்டத் திருத்தத்தின் மூலம் மாற்றியமைக்கப்பட்ட ரயில்வே சட்டம் 145 குறிப்பிடப்பட்டுள்ளது. ரயில்வே வளாகத்தில் தொந்தரவு ஏற்படுத்துதல், முறையற்ற நடத்தை மற்றும் ரயில்வே வசதிகளில் வேண்டுமென்றே குறுக்கிடுதல் போன்ற செயல்களுக்கு எதிராக இச்சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.

மேலும் படிக்க: இலவச மருத்துவ சிகிச்சை.. 66%மக்களுக்கு ரூ. 5 லட்சம் திட்டம் பற்றித் தெரியாதா..?

மீண்டும் மீண்டும் விதிகளை மீறுபவர்களுக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். இருப்பினும், செல்போனில் பாடல் கேட்பது மட்டுமே தானாகச் சிறைத் தண்டனைக்குக் காரணமாகாது; சம்பவத்தின் தன்மை மற்றும் பொருந்தும் சட்ட விதிகளின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படும்.

அக்டோபர் 20ஆம் தேதிக்குள் அறிக்கை

அனைத்து ரயில்வே கோட்டங்களும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவற்றின் விவரங்களை அக்டோபர் 20, 2026ஆம் தேதிக்குள் தலைமை அலுவலகத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ரயில் பயணத்தை அனைவருக்கும் அமைதியானதாகவும் வசதியானதாகவும் மாற்றுவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow Us