AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பாரம்பரிய சிக்கு கோல டிசைனில் மிளிரும் புதிய பிளவுஸ் டிரெண்ட்…

Sikku Kolam Blouse: வழக்கமான பிளவுஸ் மாடல்களுக்கு மாற்றாக, வீட்டு வாசலில் இடப்படும் பாரம்பரிய சிக்கு கோல டிசைன்கள் தற்போது ஆடைகளில் பெரும் டிரெண்டாகி வருகின்றன. பட்டு மற்றும் சில்க் காட்டன் சேலைகளுக்கு ஏற்ற வகையில் பிளவுஸின் பின்புறம் மற்றும் கைகளில் எம்பிராய்டரி மூலம் இந்த வளைவு வடிவங்கள் நேர்த்தியாகக் செதுக்கப்படுகின்றன.

பாரம்பரிய சிக்கு கோல டிசைனில் மிளிரும் புதிய பிளவுஸ் டிரெண்ட்…
சிக்கு கோலம் பிளவுஸ்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 19 Oct 2026 18:00 PM IST

இன்றைய மகளிர் சேலை அணியும்போது அதன் நிறத்துடன் சேர்த்து பிளவுஸ் டிசைன்களுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறார்கள். வழக்கமான பூ மற்றும் ஸ்டோன் (Sikku Kolam Blouse Design) வேலைப்பாடுகளுக்குப் பதிலாக, பாரம்பரிய சிக்கு கோல வடிவங்கள் பிளவுஸ்களில் டிரெண்டாகி வருகின்றன. வீட்டு வாசலில் போடப்படும் சிக்கு கோலத்தின் பிணைப்பு வளைவுகள் பிளவுஸ்களில் நுணுக்கமான எம்பிராய்டரி மூலம் செதுக்கப்படுகின்றன. குறிப்பாக பட்டு, காஞ்சிபுரம் மற்றும் சில்க் காட்டன் சேலைகளுடன் இந்த டிசைன் மிகப்பொருத்தமாக அமைகிறது. பிளவுஸின் பின்புறம், கைகள் மற்றும் கழுத்துப்பகுதிகளில் இந்த அழகிய கோல வடிவங்களை வரைந்து கொள்ள முடியும். பாரம்பரிய அழகும் நவீன ஃபேஷனும் இணைந்து வெளிப்படுவதால் இது பெண்களுக்குத் தனித்துவமான தோற்றத்தைத் தருகிறது. எனவே, புதுமையான ஆடைகளை விரும்பும் சேலை பிரியர்களுக்கு இந்த சிக்கு கோலம் பிளவுஸ் சிறந்த தேர்வாகும்.

Also Read: தீபாவளி பண்டிகைக்கு வீட்டை மங்களகரமாய் மாற்ற எளிய வாஸ்து..!

சேலை விரும்பிகளுக்கான லேட்டஸ்ட் டிரெண்ட்

சேலை அணியும்போது சேலையின் நிறத்துக்கு மட்டுமல்ல, அதற்கு ஏற்ற பிளவுஸ் டிசைனுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வழக்கமான பூ டிசைன், எம்பிராய்டரி, ஸ்டோன் ஒர்க் என பார்த்துப் பார்த்து பழகிய டிசைன்களுக்கு மத்தியில், இப்போது சற்று வித்தியாசமான ஒரு டிரெண்ட் பெண்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதுதான் நம் வீட்டு வாசலில் தினமும் போடும் பாரம்பரிய சிக்கு கோலத்தின் அழகிய வளைவுகளை அப்படியே பிளவுஸ் டிசைனாக மாற்றும் ஃபேஷன். வாசலில் கோலமாக தொடங்கிய அந்த அழகு இப்போது உங்கள் ஆடையிலும் மிளிரட்டும். கோலத்தின் ஒவ்வொரு கோடும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து உருவாக்கும் அந்த நுணுக்கமான வடிவங்கள், பிளவுஸில் பயன்படுத்தப்படும்போது பார்ப்பதற்கே மிகவும் அழகாகவும் தனித்துவமாகவும் இருக்கின்றன.

Also Read: தீபாவளி பண்டிகைக்கு வீட்டை மங்களகரமாய் மாற்ற எளிய வாஸ்து..!

பாரம்பரியமும் நவீனமும் கலந்த ஸ்டைலான தோற்றம்

குறிப்பாக பட்டு சேலை, காஞ்சிபுரம் சேலை, சில்க் காட்டன் மற்றும் பாரம்பரிய சேலைகளுடன் இந்த டிசைன் அணிந்தால், பாரம்பரியமும் நவீன ஃபேஷனும் கலந்த ஒரு ஸ்டைலான தோற்றம் கிடைக்கும். எல்லோரும் அணிவது போல இல்லாமல், எனக்கென்று ஒரு தனி டிசைன் வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு இந்த சிக்கு கோலம் பிளவுஸ் ஒரு சூப்பர் தேர்வாக இருக்கலாம். எளிமையான கோடு வேலை முதல் அடர்த்தியான சிக்கு கோலம் வரை, உங்கள் விருப்பத்துக்கும் சேலையின் தன்மைக்கும் ஏற்ப பல விதங்களில் இதை வடிவமைக்க முடியும். இந்த சிக்கு கோலம் பிளவுஸ் டிசைனின் முக்கிய சிறப்பே அதன் தொடர்ச்சியான வளைவு கோடுகள்தான். சிக்கு கோலத்தில் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து அழகாக நகரும் கோடுகளைப் போலவே, பிளவுஸின் பின்புறம், கைப்பகுதி, கழுத்து வடிவம் அல்லது முன்புறத்தில் நுணுக்கமான எம்பிராய்டரி அல்லது பிரிண்ட் வேலைப்பாடுகள் அமைக்கப்படுகின்றன.

Follow Us