AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீபாவளி: ரூ 50,000-க்குள் அட்டகாசமான விமானக் கட்டணச் சலுகைகள்..

Diwali Travel: தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் தாய்லாந்து, வியட்நாம் மற்றும் மலேசியா போன்ற வெளிநாடுகளுக்குப் பயணிக்க ரூ.50,000-க்கும் குறைவான சிறப்பு விமானக் கட்டணச் சலுகைகள் கிடைக்கின்றன. எளிய விசா நடைமுறைகளுடன் கூடிய இந்த ஆசிய நாடுகள் குறைந்த பட்ஜெட்டில் வெளிநாட்டுப் பயணம் செல்ல விரும்பும் இந்தியப் பயணிகளுக்கு மிகச் சிறந்த தேர்வாக அமைந்துள்ளன.

தீபாவளி: ரூ 50,000-க்குள் அட்டகாசமான விமானக் கட்டணச் சலுகைகள்..
கோப்புப்படம்.Image Source: tv9
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 19 Oct 2026 16:30 PM IST

வரும் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் இந்தியப் பயணிகளுக்கு(Indian Family) ரூ.50,000-க்குள் சிறப்பு விமானக் கட்டணச் சலுகைகள் கிடைக்கின்றன. பண்டிகைக் காலங்களில் பொதுவாக விமானக் கட்டணம் உயரும் என்றாலும், நடப்பாண்டில் முக்கிய ஆசிய நாடுகளுக்குக் குறைந்த கட்டணத்தில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தாய்லாந்து, வியட்நாம், மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகள் குறைந்த பட்ஜெட்டில் சென்று வரப் பொருத்தமான தேர்வுகளாக உருவெடுத்துள்ளன. பல அண்டை நாடுகள் இந்தியப் பயணிகளுக்கு விசா விலக்கு அல்லது எளிய விசா நடைமுறைகளை வழங்குவது இந்த சலுகைக்காலப் பயணத்தை மேலும் எளிதாக்குகிறது. கடைசி நேர விலை உயர்வைத் தவிர்க்கப் பயணிகள் தங்களது விமான டிக்கெட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்வது மிகவும் அவசியமாகும். விமான நிறுவனங்களின் பண்டிகைக் கால சிறப்புத் தள்ளுபடிகள் மூலம் பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் குறைந்த செலவில் நினைவில் நிற்கும் பயணத்தை மேற்கொள்ள முடியும்.

Also Read: சென்னைவாசிகளுக்கு IRCTC கொடுத்த செம சர்ப்ரைஸ்: 8 நாள் வியட்நாம் – கம்போடியா ட்ரிப்!

ரூ.50,000-க்குள் விமானக் கட்டண சலுகைகள் அறிவிப்பு

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், தங்களது விடுமுறையைக் கொண்டாட வெளிநாடுகளுக்குச் செல்லத் திட்டமிடும் இந்தியப் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருக்கிறது. வழக்கமாக தீபாவளி மற்றும் பிற முக்கிய பண்டிகைக் காலங்களில் விமானக் கட்டடங்கள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திருக்கும். ஆனால், நடப்பாண்டில் பிரபல விமான நிறுவனங்கள் மற்றும் பயணச் சேவைகள் இணைந்து, ரூ.50,000-க்கும் குறைவான பட்ஜெட்டில் தென்கிழக்காசியா மற்றும் அண்டை நாடுகளுக்குப் பயணிக்கக் கூடிய மிகச் சிறப்பு வாய்ந்த விமானக் கட்டணச் சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

பட்ஜெட் பயணிகளுக்கு ஏற்ற ஆசிய நாடுகளின் பட்டியல்

ரூ.50,000-க்குள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள விரும்பும் இந்திய மக்களுக்கு வியட்நாம், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா (பாலி) மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் மிகச் சிறந்த தேர்வாக மாறியுள்ளன. குறைந்த கட்டண விமானங்களின் வருகையால், இந்தக் குளுமையான மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் நாடுகளுக்குச் சென்று வரக் கூடிய விமான டிக்கெட் கட்டணங்கள் தற்போது கணிசமாகக் குறைந்துள்ளன. குறிப்பாக, பண்டிகைக் கால முன்பதிவுகளுக்கு விமான நிறுவனங்கள் சிறப்புத் தள்ளுபடிகளையும் வழங்குகின்றன.

Also Read: சென்னைவாசிகளுக்கு IRCTC கொடுத்த செம சர்ப்ரைஸ்: 8 நாள் வியட்நாம் – கம்போடியா ட்ரிப்!

முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்

பண்டிகைக் காலத்தில் கடைசி நேரத்தில் விமான டிக்கெட் முன்பதிவு செய்வதைத் தவிர்த்து, சில வாரங்களுக்கு முன்பே திட்டமிடுவது பயணச் செலவை வெகுவாகக் குறைக்கும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த சிறப்புச் சலுகைகளைப் பயன்படுத்தி, பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் குறைந்த செலவில் வெளிநாடுகளில் தீபாவளியைக் கொண்டாடலாம். மேலும், தங்குமிடம் மற்றும் இதர செலவுகளையும் முன்கூட்டியே திட்டமிட்டால், ஒட்டுமொத்தப் பயணமும் மிகவும் சிக்கனமானதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

Follow Us