சென்னைவாசிகளுக்கு IRCTC கொடுத்த செம சர்ப்ரைஸ்: 8 நாள் வியட்நாம் – கம்போடியா ட்ரிப்!
IRCTC Tour: ஐஆர்சிடிசி நிறுவனம் சென்னையிலிருந்து வியட்நாம் மற்றும் கம்போடியா நாடுகளுக்கு 8 நாட்கள் கொண்ட புதிய வெளிநாட்டுச் சுற்றுலாப் பேக்கேஜை நவம்பர் மாதத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. விமானக் கட்டணம், தங்குமிடம், உணவு மற்றும் விசா உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் ஒரு நபருக்கு ரூ.1.5 லட்சத்தில் தொடங்கும் இந்தக் கட்டணத்தில் பயணிகள் பல முக்கிய வரலாற்றுத் தலங்களைக் கண்டு ரசிக்கலாம்.
இந்திய இரயில்வே சுற்றுலா கழகம் (IRCTC) சென்னைவாசிகளுக்காக வியட்நாம் மற்றும் கம்போடியா நாடுகளை உள்ளடக்கிய 8 நாள் மற்றும் 7 இரவுகள் கொண்ட புதிய வெளிநாட்டுச் சுற்றுப்பயணத் தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. பெங்களூருக்குப் பிறகு தென்னிந்தியாவில் சென்னையிலிருந்து தொடங்கப்படும் இந்த அற்புதமான சுற்றுலா வருகிற நவம்பர் 17 முதல் 25ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பயணத் தொகுப்பு கட்டணத்தில் விமானப் பயணம், சொகுசு தங்குமிடம், சுவையான உணவு, உள்ளூர் போக்குவரத்து, விசா கட்டணம் மற்றும் பயணக் காப்பீடு ஆகியவை முழுமையாக அடங்கும். ஒருவருக்கான குறைந்தபட்ச கட்டணம் சுமார் 1.5 லட்சத்தில் தொடங்கி, தங்கும் அறையைப் பொறுத்து மாறுபடுகிறது.
சென்னையிலிருந்து வியட்நாம் மற்றும் கம்போடியா சுற்றுப்பயணம்
இந்திய இரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) தென்கிழக்காசிய நாடுகளின் கலாச்சாரம் மற்றும் இயற்கை அழகை ரசிக்கும் வகையில் சென்னைவாசிகளுக்கு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வியட்நாம் மற்றும் கம்போடியா நாடுகளுக்கு 8 நாட்கள் மற்றும் 7 இரவுகள் கொண்ட புதிய சுற்றுலாப் பேக்கேஜ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூருக்குப் பிறகு சென்னையிலிருந்து இந்த வெளிநாட்டுப் பயணம் தொடங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பயணத் தேதியும் கட்டண விவரமும்
இந்தச் சுற்றுப்பயணம் வருகிற நவம்பர் 17 முதல் 25ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ளது. இதில் விமானக் கட்டணம், தங்குமிடம், உணவு, உள்ளூர் போக்குவரத்து, வழிகாட்டிகள், விசா கட்டணம் மற்றும் பயணக் காப்பீடு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இந்தத் தொகுப்புக்குள் அடங்கும். ஒரு நபர் தனி நபர் அறைக்கு ரூ.1,75,200 எனவும், இருவர் பகிரும் அறைக்கு ரூ.1,53,750 எனவும், மூன்று பேர் தங்கும் அறைக்கு ரூ.1,51,250 எனவும் இதன் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
Also Read: இரவில் கொசுக்களின் தொல்லையால் உறக்கம் கெடுகிறதா?
பார்வையிடப்படும் முக்கிய இடங்கள்
இந்தச் சுற்றுப்பயணத்தின் போது வியட்நாமில் உள்ள அழகிய ட நாங் (Da Nang), ஹனோய் (Hanoi), ஹலோங் விரிகுடா (Ha Long Bay) ஆகிய இடங்களும், கம்போடியாவில் உள்ள சீம் ரீப் (Siem Reap) மற்றும் புகழ்பெற்ற அங்கோர் வாட் (Angkor Wat) கோயில்களும் பயணிகளால் பார்வையிடப்படும். வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், பாரம்பரியக் கோயில்கள் மற்றும் நவீன பாலம் போன்ற பல அற்புதமான காட்சிகளைக் கண்டு மகிழலாம்.
விமானப் பயணம் மற்றும் முன்பதிவு நடைமுறைகள்
பயணிகள் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சிங்கப்பூர் வழியாக ட நாங் நகரைச் அடைவார்கள். பின்னர் வியட்நாம் மற்றும் கம்போடியா முழுவதும் பல்வேறு விமானச் சேவைகள் மூலம் பயணம் செய்து, இறுதியில் நவம்பர் 25 அன்று சென்னை திரும்புவர். பயணக் கட்டணத்தில் 2% டிசிஎஸ் (TCS) வரி சேர்க்கப்பட்டுள்ளதுடன், பான் கார்டு விவரங்கள் மற்றும் பிரகடனப் படிவங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.