AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

9 நாள் விரதத்திற்கு பிறகு சாப்பிட வேண்டிய 7 ஸ்பெஷல் நான்வெஜ்…!

Navratri Fasting: 9 நாட்கள் விரதத்திற்குப் பிறகு, பட்டர் சிக்கன், பிரியாணி மற்றும் மட்டன் கீமா போன்ற பல வகையான சுவையான அசைவ உணவுகளை சாப்பிட்டு உற்சாகமாகத் தொடங்கலாம். கோவன் பிரான் கறி, ரோகன் ஜோஷ் மற்றும் அமிர்தசரசி ஃபிஷ் ஃபிரை போன்ற பாரம்பரிய உணவுகள் நீண்ட விரதத்திற்குப் பிந்தைய நாவின் சுவை ஏக்கத்தைப் பூர்த்தி செய்யும்.

9 நாள் விரதத்திற்கு பிறகு சாப்பிட வேண்டிய 7 ஸ்பெஷல் நான்வெஜ்…!
அசைவ உணவுகள்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 14 Oct 2026 10:18 AM IST

ஒன்பது நாட்கள் தீவிரமான விரத முறை மற்றும் சாத்வீக அசைவமற்ற உணவுகளை வெற்றிகரமாக முடித்த பிறகு, மீண்டும் அசைவ உலகிற்குத் திரும்புவது அசைவப் பிரியர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியைத் தரும். விரதம் நிறைவடைந்ததும் நாவில் எச்சில் ஊறும் வகையில், விருப்பமான சுவையான உணவுகளை ருசித்துப் பார்ப்பது பலரது உற்சாகமான வழக்கமாக உள்ளது. அந்த வகையில், நவராத்திரி விரதம் முடிந்தவுடன் விரும்பிச் சுவைக்க வேண்டிய 7 சூப்பரான அசைவ உணவுகள் எவை என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

பட்டர் சிக்கன் (Butter Chicken)

விரதத்திற்குப் பிறகு சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற உணவுகளில் பட்டர் சிக்கன் முதலிடத்தில் உள்ளது. மென்மையான சிக்கன் துண்டுகள் அடர்த்தியான மற்றும் கிரீமியான தக்காளி கிரேவியில் சமைக்கப்பட்டு, வெண்ணெய் மணத்துடன் பரிமாறப்படும் இந்த உணவு பல நாட்களுக்குப் பிறகு அசைவ ருசியைத் தொடங்குவதற்குச் சரியான தொடக்கமாக அமையும்.

Also Read: இட்லி, தோசை மாவு சீக்கிரம் புளிக்க வேண்டுமா? இதை சேர்த்தால் போதும்!

சுவையான கோவன் பிரான் கறி (Flavourful Goan Prawn Curry)

கடற்கரை மாநிலமான கோவாவின் பாரம்பரிய மணமும் சுவையும் நிறைந்த இறால் குழம்பு (Goan Prawn Curry) அசைவப் பிரியர்களின் நாவில் நீங்கா இடம் பிடித்தது. தேங்காய்ப் பால், புளி மற்றும் தனித்துவமான மசாலாப் பொருட்கள் சேர்த்துத் தயாரிக்கப்படும் இந்த உணவு விரதக் கிடுக்குப் பிடியிலிருந்து விடுபட்ட நாவிற்குச் சுடச்சுட சாதத்துடன் அருமையான விருந்தாக இருக்கும்.

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி (Hyderabadi Chicken Biryani)

மணக்கும் பாசுமதி அரிசி, மசாலா ஊறிய சிக்கன் மற்றும் குங்குமப்பூ வாசனை ஆகியவை இணைந்து ஹைதராபாத் சிக்கன் பிரியாணி நீண்ட விரதத்திற்குப் பிந்தைய கொண்டாட்டத்தைச் சிறப்பாக்கக் கூடியது. இதன் தனித்துவமான தம்மில் சமைக்கப்பட்ட நறுமணமிக்க சுவை அனைவரையும் உடனடியாக ஈர்க்கும் தன்மை கொண்டது.

ரோகன் ஜோஷ் (Rogan Josh)

காஷ்மீர் மாநிலத்தின் பாரம்பரிய அடையாளமாகக் கருதப்படும் ரோகன் ஜோஷ், ஆட்டிறைச்சியை விரும்பி உட்கொள்ளக் காத்திருக்கும் உணவுப் பிரியர்களுக்கான மிகச் சிறந்த தேர்வாகும். நறுமணமிக்க காஷ்மீரி மிளகாய் மற்றும் பலவிதமான மசாலாப் பொருட்களுடன் மெதுவாகச் சமைக்கப்படும் இந்த இறைச்சி உணவு தனித்துவமான ஆழமான சுவையைத் தரும்.

அமிர்தசரசி ஃபிஷ் ஃபிரை (Amritsar Fish Fry)

வட இந்தியாவில் வெகுவாக விரும்பப்படும் இந்த மீன் வறுவல் மொறுமொறுப்பான வெளிப்புறமும், உள்ளே மென்மையான மீன் துண்டுகளையும் கொண்டு இருக்கும். விரதம் முடிந்து புதியதொரு அசைவ உணவை இலகுவாகத் தொடங்க எலுமிச்சை சாறு மற்றும் சாட் மசாலா தூவிய இந்த மீன் உணவு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

Also Read: இட்லி, தோசை மாவு சீக்கிரம் புளிக்க வேண்டுமா? இதை சேர்த்தால் போதும்!

சிக்கன் கராஹி (Chicken Karahi)

இரும்புச் சட்டியில் (கராஹி) தக்காளி, இஞ்சி, பூண்டு மற்றும் புதிய மசாலாப் பொருட்களுடன் அதிவேகமாக வதக்கித் தயாரிக்கப்படும் இந்தச் சிக்கன் வகை விரதத்திற்குப் பின் சுவைக்க அருமையான உணவுத் தேர்வாகும். இதன் காரசாரமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சுவை அசைவப் பிரியர்களுக்கு முழுமையான திருப்தியை அளிக்கும்.

மட்டன் கீமா (Mutton Keema)

பொடியாக நறுக்கப்பட்ட ஆட்டிறைச்சியுடன் பட்டாணி, வெங்காயம் மற்றும் நறுமண மசாலாப் பொருட்கள் சேர்த்துத் தயாரிக்கப்படும் மட்டன் கீமா மிகவும் ருசியானது. இதனைச் சப்பாத்தி, நாண் அல்லது சூடான சாதத்துடன் சேர்த்து உண்பதன் மூலம் நாவராத்திரி விரதத்தின் நிறைவைக் கொண்டாட்டமாக மாற்றலாம்.

Follow Us