பெரம்பூர் தொகுதிக்கு 13 நவீன பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் இயந்திரங்கள்! முதலமைச்சர் விஜய் உத்தரவு..
CM Vijay - Perambur Constituency: சென்னையில் பாதாள சாக்கடைகளை மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் நடைமுறையைத் தவிர்த்து, இயந்திரங்கள் மூலமாகவே பாதுகாப்பாகச் சுத்தம் செய்யும் திட்டத்தை விரிவுபடுத்த சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக 13 நவீன இயந்திரங்களைக் கொள்முதல் செய்யத் தேசிய அளவிலான திறந்த டெண்டர் கோரப்பட்டுள்ளது.
அக்டோபர் 19, 2026: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் மழைக்காலப் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் விஜய்யின் சொந்தத் தொகுதியான பெரம்பூரில் பாதாள சாக்கடைகளை நவீன இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பெரம்பூர் தொகுதி நிதியிலிருந்து 13 நவீன இயந்திரங்களைக் கொள்முதல் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 நவீன இயந்திரங்கள் கொள்முதல்
சென்னையில் பாதாள சாக்கடைகளை மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் நடைமுறையைத் தவிர்த்து, இயந்திரங்கள் மூலமாகவே பாதுகாப்பாகச் சுத்தம் செய்யும் திட்டத்தை விரிவுபடுத்த சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக 13 நவீன இயந்திரங்களைக் கொள்முதல் செய்யத் தேசிய அளவிலான திறந்த டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இரண்டு கவர் முறையில் டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்ட டீசல் மூலம் இயங்கும் இயந்திரங்கள், ஜெட் ராடிங் இயந்திரங்கள் மற்றும் சூப்பர் சக்கர் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றைக் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வெள்ள தடுப்பு ஆய்வறிக்கையில் உள்ள சூட்சமம்.. திமுக அரசு செய்யாததை தவெக அரசு செய்ய வேண்டும்.. பெ. சண்முகம்!
ஜெட் ராடிங் இயந்திரங்கள் உயர் அழுத்த நீரைப் பயன்படுத்தி பாதாள சாக்கடைகளில் படிந்துள்ள கழிவுகள் மற்றும் அடைப்புகளை அகற்ற உதவுகின்றன. சூப்பர் சக்கர் இயந்திரங்கள் சக்திவாய்ந்த உறிஞ்சும் தொழில்நுட்பத்தின் மூலம் சேறு, கழிவுநீர் மற்றும் திடக்கழிவுகளை அகற்றுவதற்குப் பயன்படுகின்றன. இதனால் அடைப்புகளை விரைவாக அகற்றுவதுடன், மனிதர்கள் கழிவுநீர்த் தொட்டிகளுக்குள் இறங்க வேண்டிய அவசியத்தையும் குறைக்க முடியும்.
வடசென்னையில் மழைக்காலப் பாதிப்புகளைத் தடுக்கத் திட்டம்
வடசென்னையின் பல பகுதிகளில் கனமழையின்போது மழைநீர் வடிகால்கள் மற்றும் பாதாள சாக்கடைகளில் அடைப்புகள் ஏற்படுவது, கழிவுநீர் சாலைகளில் வெளியேறுவது போன்ற பிரச்சினைகள் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றன. வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் நிலையில், இத்தகைய பாதிப்புகளை முன்கூட்டியே தடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: நடத்தையில் சந்தேகம்.. மனைவியின் தலையை கொடுவாளால் பதம் பார்த்த கணவன்.. ஓசூரில் பரபர சம்பவம்!
இதைக் கருத்தில் கொண்டு, பெரம்பூர் தொகுதியில் பாதாள சாக்கடை பராமரிப்புப் பணிகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்கவும் இந்த இயந்திரங்களைக் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மனிதர்கள் இறங்காமல் சுத்தம் செய்யும் முறைக்கு முக்கியத்துவம்
பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது விஷவாயுத் தாக்கம், ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் உயிரிழப்பு போன்ற ஆபத்துகள் ஏற்படுகின்றன. இதனைத் தவிர்க்க, இயந்திரமயமான சுத்தம் செய்யும் முறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தகுந்த இயந்திரங்கள் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்களைப் பயன்படுத்துவதன் மூலம் தொழிலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்த முடியும்.
முதலமைச்சரின் தொகுதியான பெரம்பூரில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகள், மழைக்காலத்தில் கழிவுநீர் அடைப்புகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இயந்திரங்களைக் கொள்முதல் செய்வதுடன், அவற்றை முற