அவன் தூக்குனா நானும் தூக்குவேன்.. சாப்பாட்டுக்காக டிடிஃஎப் வாசனுடன் மோத நினைக்கும் லக்ஷ்மி பிரியா!
Lakshmi Priya Fight: தமிழில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருவது பிக் பாஸ் சீசன் 10. இந்த நிகழ்ச்சியானது 7வது வாரத்தில் உள்ள நிலையில் சர்வைவல் டாஸ்க் நடந்துவருகிறது. இந்த டாஸ்கின்போது சாப்பாட்டை டிடிஃஎப் வாசன் பதிக்கிவைக்கும் நிலையில், அதற்காக லக்ஷ்மி பிரியா போடும் சண்டை தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தொகுவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ். இவர் கடந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி முதல் தமிழில் தொகுப்பாளராக பணியாற்றிவரும் நிலையில், தற்போது பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது நடைபெற்றுவருகிறது. இதற்கும் தொகுப்பாளராக விஜய் சேதுபதி தொகுத்துவருகிறார். இந்த நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கிய நிலையில், இந்நிகழ்ச்சியானது தொடங்கி இன்றுடன் 43 நாட்களாகியுள்ளது. 7வது வாரத்தின் தொடக்கத்தில் இந்த நிகழ்ச்சியானது இருந்துவரும் நிலையில், தற்போது சர்வைவல் டாஸ்க் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
இதனால் டிடிஃஎப் வாசன் உணவை எடுத்து பதுக்கி வைக்க முடிவு செய்த நிலையில், அந்த பிளான் குறித்து முத்தழகியிடம் கூறியிருந்தார். இந்த பிளானை அவரை செய்த நிலையில், அதை கண்டா எதிர் அணியில் உள்ள லக்ஷ்மி பிரியா மற்ற போட்டியாளர்களிடம் கத்தி சண்டையிடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: அட அதுக்குள்ள சண்டை ஆரம்பிச்சுடுச்சா… பிக்பாஸில் மோதிக்கொள்ளும் அக்ஷிதா – அஸ்மிதா… வைரலாகும் வீடியோ
பிக் பாஸில் சாப்பாட்டிற்காக சண்டை போட்ட லக்ஷ்மி பிரியா:
இன்று (19/10/2026) வெளியான பிக் பாஸ் 10 3வது ப்ரோமோவில், “டிடிஃஎப் வாசன், தட்டிலே சாப்பாட்டை பாதுகாத்து வைப்போம் என முத்தழகியிடம் கூறியிருந்தார். இதன் பிறகு 2 தட்டில் அவர் தனது சாப்பாட்டை பாதுகாத்து வாய்த்த நிலையில், அதை கண்டு லக்ஷ்மி பிரியவும் அதை செத்திருந்தாரா. இதனால் மற்ற போட்டியாளர்கள் லக்ஷ்மி பிரியாவிடம் ஏன் இப்படி பண்ணுறீங்க என கேட்ட நிலையில், மற்ற போட்டியாளர்களிடம் லக்ஷ்மி பிரியா கத்தி பேசியிருந்தார்.
இதையும் படிங்க: கத்தி படத்தின் இந்தி ரீமேக் உரிமையைப் பெற்ற பிரபல இயக்குநர்? வைரலாகும் தகவல்
டிடிஃஎப் வாசனை குறிப்பிட்டு, அவன் தூக்குனா நானும் தூக்குவேன் என கோபத்தில் பேசியுள்ளார். இது தொடர்பாக டிடிஃஎப் வாசன் அவரை கண்டுகொள்ளாமல் செல்வதுபோல இந்த ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 43வது நாளின் 3வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day43 #Promo3 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/qmnkMeBJD0
— Vijay Television (@vijaytelevision) October 19, 2026
இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தற்போது 7வது வாரத்தில் உள்ளது. தற்போது சர்வைவல் டாஸ்க் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், விறுவிறுப்பாக பிக் பாஸ் இல்லம் உள்ளது. கடந்த வாரத்தில் சாந்தினி மற்றும் ராகவ் என இருவர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த வாரத்தில் ஒரு எலிமினேஷன் மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது. அந்த விதத்தில் இந்த வாரத்தில் யார் வெளியேறுவார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.