ஜூனியர் என்டிஆர் இல்ல.. நெல்சன் இணையும் அடுத்த நடிகர் இவரா?
Nelson Bollywood Collaboration: மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் நெல்சன் திலீப்குமார். இவர் இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தை இயக்கியிருந்தார். இதற்கு பின் ஜூனியர் என்டிஆர்-உடன் படத்தில் இணைவதாக பேசப்பட்ட நிலையில், தற்போது பாலிவுட் நடிகருடன் இணைவதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.
தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் பேமஸான் இயக்குநராக இருந்துவருபவர் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதிய படங்கள் உருவாக்கப்பட்டுவருகிறது. இறுதியாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சினிமாவில் வெளியான திரைப்படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2). சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth) 172வது திரைப்படமாக இந்த படமானது உருவாக்கப்பட்ட நிலையில், கடந்த 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இதை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க, பான் இந்திய நடிகர்கள் பலரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது வெளியாகியுள்ள நிலையில், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை செய்துவருகிறது.
அந்த விதத்தில் இந்த படத்திற்கு பின் நெல்சன் திலீப்குமார் புதிய படங்களில் பணியாற்றும் விஷயத்தையும் தொடங்கியுள்ளார். இந்நிலையில் இவர் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர்-உடன் (Jr NTR) கூட்டணியில் இணைவதாக கூறப்பட்டுவந்த நிலையில், பாலிவுட் நடிகருடன் இணைவதாக தகவல்கள் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: டோரதி படத்தின் 25வது நாள்.. இன்ட்ரவல் சண்டை மேக்கிங் வீடியோவை வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்!
பாலிவுட் நடிகருடன் இணைகிறாரா இயக்குநர் நெல்சன் திலீப்குமார்:
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இறுதியாக ஜெயிலர் 2 படத்தை இயக்கியிருந்த நிலையில், இந்த படமானது எதிர்பாராத வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்றாக ஆகியுள்ளது. இந்த படத்திற்கு பின் ரஜினி மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கவுள்ள படத்தையும் வர இயக்குவதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: மேக்கிங் வீடியோவை வெளியிட்டது பெத்லகேம் குடும்ப யூனிட் படக்குழு – வைரலாகும் வீடியோ
அதற்கு முன் வேறு ஒரு நடிகருடன் படத்தில் இணைவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இவர் பாலிவுட் நடிகரான ஹிருத்திக் ரோஷனை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவிவருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
நெல்சன் திலீப்குமார் மற்றும் ஹிருத்திக் ரோஷன் கூட்டணி குறித்து வைரலாகும் பதிவு:
#Nelson is expected to collaborate with #HrithikRoshan on a film produced by Hombale Films 🔥
– Nelson showcased Hrithik Roshan brilliantly in #Jailer2, and Hindi audiences loved it. A full-fledged film with Hrithik, directed by Nelson, would be PEAK CINEMA for sure, with #Anirudh’s music taking it to another level 💥
— Movie Tamil (@_MovieTamil) October 18, 2026
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தமிழில் முன்னணி இயக்குநராக இருக்கும் நிலையில், ஒருவேளை ஹிருத்திக் ரோஷனுடன் படம் ஒப்பந்தமானால் பாலிவுட் வரைக்கும் இவரின் பிரபலம் இருக்கும். ஜெயிலர் 2 படத்தில் ஹிருத்திக் ரோஷன் ரோடி என்ற கேமியோ வேடத்தில் நடித்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. அதன் பிறகுதான் இந்த கூட்டணி குறித்த தகவல்கள் இணையத்தில் பரவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.