AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Nelson Dilipkumar: திரையரங்குகள் அதிர்கின்றன..! ஜெயிலர் 2 படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்புக்கு நன்றி சொன்ன இயக்குநர் நெல்சன்!

Jailer 2 Success: தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் பேமஸான இயக்குநராக இருந்துவருபவர் நெல்சன் திலீப்குமார். இவரின் இயக்கத்தில் சமீபத்தில் தமிழில் வெளியான திரைப்படம்தான் ஜெயிலர் 2. இந்த படமானது வெளியாகி சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடம் பெரும் நிலையில், அவர்களுக்கு நன்றி தெரிவித்து நெல்சன் எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.

Nelson Dilipkumar: திரையரங்குகள் அதிர்கின்றன..! ஜெயிலர் 2 படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்புக்கு நன்றி சொன்ன இயக்குநர் நெல்சன்!
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் 2Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 18 Oct 2026 16:30 PM IST

கோலிவுட் சினிமாவில் நயன்தாராவின் கோலமாவு கோகிலா (KoKo) என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக இயக்குநராக நுழைந்தவர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar). இவருக்கு முதல் படமே மாபெரும் ஹிட்டடித்த நிலையில், மக்கள் மத்தியில் இயக்குநராக இவருக்கு பிரபலம் கிடைத்தது. இதன் பிறகு டாக்டர், பீஸ்ட் போன்ற திரைப்படங்களையும் இயக்கியிருந்தார். இந்த படங்களின் வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் (Superstar Rajinikanth) இவர் இணைந்த திரைப்படம் ஜெயிலர் (Jailer). கடந்த 2023ம் ஆண்டில் இப்படமானது வெளியாகி பான் இந்திய ஹிட்டை கொடுத்திருந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் ஜெயிலர் 2 (Jailer 2) படத்தை உருவாக்கிவந்த நிலையில், கடந்த 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பாலிவுட் ஹீரோ ஹ்ரித்திக் ரோஷன் வரை பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பை கொடுத்துவரும் நிலையில், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நெல்சன் திலீப்குமார் பதிவை வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

இதையும் படிங்க: ராமாயணா படத்திற்காக ஜி.வி. பிரகாஷ் செய்த சிறப்பான விஷயம்.. அட என்ன தெரியுமா?

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நெல்சன் திலீப்குமார்:

அந்த பதிவில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார், திரையரங்குகள் அதிர்கின்றன.. தலைவர் (ரஜினிகாந்த்) மேஜிக் வேற லெவல். அன்பான ரசிகர்களே, ஜெயிலர் 2படத்திற்கு நீங்கள் கொடுக்கும் அபாரமான அன்புக்கும், வரவேற்புக்கு மிக்க நன்றி. சிகர்கள் இப்படி கொண்டாடுவதைப் பார்ப்பதற்கு ஈடு இணை இல்லை! உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. மேலும் ரஜினிகாந்த், அனிருத் மற்றும் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி” தெரிவித்து அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க:  பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் எவிக்டாவது இவரா? வைரலாகும் தகவல்!

ஜெயிலர் 2 படம் குறித்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நெல்சன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த ஜெயிலர் 2 படமானது வெளியாகிய நிலையில், மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, விஜய் சேதுபதி, வித்யா பாலன், மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது வெளியாகி 3 நாட்களான நிலையில், ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us