AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் எவிக்டாவது இவரா? வைரலாகும் தகவல்!

Bigg Boss Tamil Season 10 This Week Eviction Update | பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது 18 போட்டியாளர்கள் உள்ளனர். இதில் கடந்த வாரம் எவிக்‌ஷன் நடைபெறாத நிலையில் இந்த வாரம் எந்த போட்டியாளர் எவிக்டாக உள்ளார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் எவிக்டாவது இவரா? வைரலாகும் தகவல்!
பிக்பாஸ் தமிழ்
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Oct 2026 14:59 PM IST

சினிமாவில் உள்ள பிரபலங்கள் தங்களது கெரியரில் பின்தங்கி இருக்கும் போது அவர்களுக்கான வாய்ப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியை பயன்படுத்திக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி தமிழ் மொழியிலும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல வெள்ளித்திரை பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் போது அதனைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இதில் வெள்ளித்திரை பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள், சமூகவலைதளப் பிரபலங்கள் மற்றும் காமென்மேன்கள் ஆகியோர் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இதுவரை இந்த வீட்டில் இருந்து 5 போட்டியாளர்கள் எவிக்டான நிலையில் ப்ளாக் பாண்டி உடல்நலக் குறைவால் வெளியேரினார்.

இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தற்போது 6-வது வாரத்தின் முடிவை எட்டியுள்ளது. இந்த நிலையின் கடந்த வாரம் யாரும் எவிக்ட் செய்யப்படாத நிலையில் இந்த வாரம் ஒருவர் நிச்சயமாக எவிக்ட் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. மேலும் அது யார் என்பது குறித்த தகவலும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக்பாஸிலிருந்து இந்த வாரம் எவிக்டாவது இவரா? வைரலாகும் தகவல்:

அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து இந்த 6-வது வாரம் நடிகை சாந்தினி வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்தனை வாரங்களாக உள்ளே இருக்கும் சாந்தினி கடந்த இரண்டு வாரங்களாக தான் இந்த நிகழ்ச்சியில் விளையாடி வருவதாக  பார்வையாளர்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று சாந்திரி எவிக்டாவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது.

Also Read… மன்னன் நான் வந்தனா ஊர் அலற… ஒரு ஆண்டை நிறைவு செய்தது பிரதீப் ரங்கநாதனின் டியூட் படம்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Ranabaali: மிகவும் தூய்மையான ஒரு பெண்.. ரணபாலி படத்தில் நடித்தது குறித்து ராஷ்மிகா பகிர்ந்த விஷயம்!

Follow Us