Ranabaali: மிகவும் தூய்மையான ஒரு பெண்.. ரணபாலி படத்தில் நடித்தது குறித்து ராஷ்மிகா பகிர்ந்த விஷயம்!
Rashmika Mandanna X Post: சினிமாவில் மக்கள் கொண்டாடும் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் ராஷ்மிகா மந்தனா. விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்துள்ள ரணபாலி படமானது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் இப்படத்தில் ஜெயம்மாவாக நடித்த அனுபவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் அதிகம் கொண்டாடப்படும் நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் ராஷ்மிகா மந்தனா (Rashmika Manndana). இவர் கன்னட சினிமாவின் மூலமாக நடிகையாக நுழைந்திருந்தாலும், தெலுங்கு சினிமாவின் மூலமாக மக்கள் மத்தியில் பேமஸானார். இவர் சினிமாவில் சல்மான்கான் (Salman Khan) முதல் முதல்வர் விஜய் (CM Vijay) உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களுக்கும் ஜோடியாக படங்களில் நடித்துள்ளார். அந்த விதத்தில் பல நாள் காதலனான விஜய் தேவரகொண்டாவை (Vijay Deverakonda) கடந்த 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கரம்பிடித்தார். இந்த ஜோடியானது கீதா கோவிந்தம், டியர் காம்ப்ரெட் போன்ற படங்களில் இணைந்து நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார்கள். அந்த விதத்தில் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பின் இந்த ஜோடியானது இணைந்து நடித்துள்ள புதிய படம்தான் ரணபாலி (Ranabaali).
இயக்குநர் ராகுல் சங்கிருத்யன் (Rahul Sankrityn) இயக்கத்தில் உருவாகியிருந்த இப்படம், 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்துவருகிறது. இந்நிலையில் இப்படத்தில் ஜெயம்மா என்ற வேடத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: அது ரொம்ப கஷ்டமாக இருந்தது… ஒரு பாடமாக ஏற்றுக்கொண்டேன் – சாய் பல்லவி சொன்ன விஷயம்
ரணபாலி படத்தில் நடித்தது குறித்து ராஷ்மிகா மந்தனா பகிர்ந்து அனுபவம் குறித்த எக்ஸ் பதிவு:
Jayamma !! ❤️
A woman whose love is so pure!!
She spoke to me about what being a woman is truly about. Standing up for her people, protecting her people loving her people with all she has. ❤️❤️There is so much love pouring in for Ranabaali and Jayamma, and I feel so overwhelmed and happy. ❤️
The film speaks about the strength we have as a community, our belief in God, our strength to celebrate the little things even in the darkest of times, and how we all stand as one when someone from outside tries to intervene.. we don’t just stand and watch – we fight, and that’s what Ranabaali is about! We all fighting together for the same cause! ❤️
Watching Ranabaali is an experience that shouldn’t be missed in the theatres.. I don’t say this cz it’s my film.. but I say this because when there is a good film that’s made.. it’s important that it should be experienced fully! ❤️
@Rahul_Sankrityn is one of the most BEAUTIFUL storytellers we have in our country today and I really hope his storytelling is always and always protected.. and I truly am glad he’s seeing all of his hard work being appreciated by you loveliest people.. ❤️❤️
@TheDeverakonda – I told you and I keep telling you that I am a fan and I will forever be a fan of your work.. today seeing everyone appreciate you and your hard work (which you always do) and your work brings me one great sense of joy and peace and happiness.. my heart is happy happy for you! 🥰🥰🥰🥰❤️
The whole team has come together so beautifully to complete this film together!! ❤️
Thankyou to each and every one of you who’s made this film what it is today! ❤️
And to everyone who’s already watched the film – biggesttt bone-crushing hugs to you! ❤️
THANK YOU!!!
Seeing you all love the film and love Jayamma means more to me than I can explain in words!!🥹❤️I hope Ranabaali stays with you long after you leave the theatres! ❤️
With all my love,
Your Jayamma! ❤️— Rashmika Mandanna (@iamRashmika) October 17, 2026
ரணபாலி படத்தில் நடித்தது குறித்து ராஷ்மிகா பகிர்ந்த விஷயம்:
அந்த பதிவில் ராஷ்மிகா, “அன்பு மிகவும் தூய்மையான ஒரு பெண். ஒரு பெண்ணாக இருப்பதன் உண்மையான அர்த்தம் என்ன என்பதைப் பற்றி அவர் என்னிடம் பேசினார். தன் மக்களுக்காக நிற்பது, தன் மக்களைப் பாதுகாப்பது, தன்னிடமுள்ள அனைத்தையும் கொண்டு அவர்களை நேசிப்பது. ரணபாலி மற்றும் ஜெயம்மா மீது மிகுந்த அன்பு பொழிந்து கொண்டிருக்கிறது, நான் நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்.
இதையும் படிங்க: சொக்கத் தங்கம்.. மறைந்த இசையமைப்பாளர் தேவா குறித்து ரஜினிகாந்த் பேசிய வீடியோ!
ஒரு சமூகமாக நம்மிடம் உள்ள வலிமை, கடவுள் மீதான நமது நம்பிக்கை, இருண்ட காலங்களில் கூட சிறிய விஷயங்களைக் கொண்டாடும் நமது வலிமை, மற்றும் வெளியிலிருந்து ஒருவர் தலையிட முயற்சிக்கும்போது நாம் அனைவரும் எப்படி ஒன்றாக நிற்கிறோம் என்பதைப் பற்றி இந்தப் படம் பேசுகிறது. ரணபாலி திரைப்படத்தை திரையரங்குகளில் பார்ப்பது தவறவிடக்கூடாத ஓர் அனுபவம். இது என்னுடைய படம் என்பதால் நான் இதைச் சொல்லவில்லை. ஒரு நல்ல படம் வெளிவரும்போது, அதை முழுமையாக அனுபவிப்பது அவசியம் என்பதால் சொல்கிறேன்” என அதில் கூறியுள்ளார்.