AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து 2-வது முறை ஜெயிலர் 2 படம் பார்த்த ராகவா லாரன்ஸ் – வைரலாகும் போஸ்ட்

Raghava Lawrence X Post | தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தான் இரண்டாவது முறையாக எஸ்.ஜே.சூர்யா உடன் இணைந்து ஜெயிலர் 2 படம் பார்த்தது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளர்.

எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து 2-வது முறை ஜெயிலர் 2 படம் பார்த்த ராகவா லாரன்ஸ் – வைரலாகும் போஸ்ட்
ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Oct 2026 14:44 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் சினிமாவில் நடன இயக்குநராக தனது பணியைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தான் நடன இயக்குநராக பணியாற்றும் படங்களில் நாயகனுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதையும் வழக்கமாக வைத்து இருந்தார். பிறகு அவ்வபோது குட்டி குட்டி கேமியோ வேடங்களில் நடித்து வந்த ராகவா லாரன்ஸ். தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன்படி அவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு அவரது நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியகாவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் தற்போது தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றது.

இவரது நடிப்பில் உருவாகும் படங்கள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸை தெரிந்தவர்களுக்கு அவர் எவ்வளவு பெரிய ரஜினிகாந்த் ரசிகர் என்பதையும் அறிவார்கள். இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து 2-வது முறை ஜெயிலர் 2 பார்த்த லாரன்ஸ்:

அதன்படி ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, எஸ்.ஜே. சூர்யா அவர்களுடன் இணைந்து ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தை இரண்டாவது முறையாகப் பார்த்தேன். ‘பாட்ஷா’ படத்திற்குப் பிறகு, ‘தலைவர்’ அவர்களின் அதிரடியான (MASS) காட்சிகளுக்காகவே மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் ஒரு படமாக ‘ஜெயிலர் 2’ அமைந்துள்ளது. ‘தலைவர்’ ரசிகர்களுக்கு இந்த பிரம்மாண்டமான விருந்தை வழங்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மற்றும் அனிருத் ஆகியோருக்குப் பெரிய நன்றிகள். படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்கள், படக்குழுவினர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… பிக் பாஸில் டைமென்டை திருடிய டிடிஃஎப் வாசன்.. மாஸ்டர் பிளான் போடும் அவினாஷ்!

ராகவா லாரன்ஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சின்னத்திரை நிகழ்ச்சியில் கண்கலங்கிய சமந்தா.. வெங்கடேஷ் பட் செய்த விஷயம்!

Follow Us