பிக் பாஸில் டைமென்டை திருடிய டிடிஃஎப் வாசன்.. மாஸ்டர் பிளான் போடும் அவினாஷ்!
Diamond Heist Task: தமிழில் சிறந்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருவதுதான் பிக் பாஸ். தற்போது தமிழி பிக் பாஸ் சீசன் 10 நடைபெற்றுவரும் நிலையில், அதில் டைமென்ட் ஹெய்ஸ்ட் டாஸ்க் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அதில் டிடிஃஎப் வாசனுக்கு எதிராக அவினாஷ் அசோக் போட்ட மாஸ்டர் பிளானை குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழில் மக்கள் மத்தியில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக திகழ்வதுதான் பிக் பாஸ் (Bigg Boss). தற்போது பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்த்தியானது தொடங்கி சிறப்பாக மற்றும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்துவரும் நிலையில், மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது. இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியோடு தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 39 நாட்களாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியானது 6வது வாரத்தை கடந்த நிலையில், சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 18 போட்டியாளர்களுடன் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
இந்த போட்டியில் தற்போது டைமென்ட் ஹெய்ஸ்ட் டாஸ்க் நடைபெற்றுவரும் நிலையில், விறுவிறுப்பாக இருக்கிறது. அந்த விதத்தில் டிடிஃஎப் வாசன் (TTF Vasan) டைமென்டை திருடிய நிலையில், அது அவினாஷிற்கு தெரியும். அந்த விதத்தில் அவினாஷ், டிடிஃஎப் வாசனுக்கு எதிராக பிளான் போடுவது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: தலைவரு நிரந்தரம்… ஜெயிலர் 2 படத்தின் FDFS காட்சியை பார்த்து வாழ்த்திய தமிழ் பிரபலங்கள்!
டைமென்ட் ஹெய்ஸ்ட் டாஸ்கில் டிடிஃஎப் வாசனுக்கு எதிராக பிளான் போட்ட அவினாஷ் அசோக்:
இந்த ப்ரோமோவில், லக்ஷ்மி பிரியா அவினாஷிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவினாஷ், லக்ஷ்மி பிரியாவிடம் டைமென்ட் டாஸ்கில் டைமென்டை யார் திருடினார் என கேட்டிருந்தார். அதற்கு அவினாஷ் டிடிஃஎப் வாசன்தான் திருடினார் என்றும், அவர் எங்கே ஒளிதி வைத்திருக்கிறார் என தெரியவில்லை என்றும், அந்த டைமென்ட் யாரிடம் இருக்கிறதோ அவர்தான் பெரிய ஆள் என்பது போல அதில் அவர் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் இன்று எங்கே… 22 ஆண்டுகளைக் கடந்தது 7ஜி ரெயின்போ காலனி படம்!
மேலும் எந்த டைமென்ட் யார் கையில் இருக்கவேண்டும் என்பது போல மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டுள்ளார். இது குறித்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 39வது நாளின் 3வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day39 #Promo3 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/EvF8C97s5l
— Vijay Television (@vijaytelevision) October 15, 2026
இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் சிறப்பாக வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பமாகி கிட்டத்தட்ட 39வது நாளை கடந்த நிலையில் சிறப்பாக வரவேற்கப்பட்டுவருகிறது. தற்போது டைமென்ட் ஹெய்ஸ்ட் டாஸ்க் நடைபெற்றுவரும் நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. தற்போது பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது அதிக வரவேற்பை பெற்றுவருகிறது.