AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பயமா எனக்கா? பிக்பாஸில் போட்டியாளர்களை வெறுப்பேற்றும் டிடிஎஃப் வாசன் – வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் டைமண்ட் ஹீய்ஸ்ட் டாஸ்கில் வைரம் திருடுபோன நிலையில் அதுகுறித்து இன்று விசாரணை கமிட்டி அமைத்து விசாரித்து வரும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பயமா எனக்கா? பிக்பாஸில் போட்டியாளர்களை வெறுப்பேற்றும் டிடிஎஃப் வாசன் – வைரலாகும் வீடியோ
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Oct 2026 13:29 PM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இதுவரை 5 வாரங்கள் முடிவடைந்து தற்போது 6-வது வாரத்தை எட்டியுள்ளது. தற்போது 6-வது வாரத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg boss Tamil Season 10) நிகழ்ச்சியில் இரண்டு டாஸ்குகள் ஒரே நேரத்தில் நடைப்பெற்று கொண்டு இருக்கின்றது. மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ள இந்த நிகழ்ச்சியில் டைமண்ட் ஹீய்ஸ்ட் டாஸ்கில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் தனியாகவோ, கூட்டு சேர்ந்தோ அந்த டைமண்டை திருடலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதே போல டான்ஸ் மாரத்தான் நிகழ்ச்சியில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரண்டு  இரண்டு பேராக இணைந்து நடனமும் ஆடி வருகின்றனர். ஒரே நேரத்தில் இரண்டு டாஸ்குகளும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் நேற்று டிடிஎஃப் வாசன் வைரத்தை திருடிவிட்டார்.

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் ஒரு கமிட்டி ஒன்றை அமைத்து அந்த வைரத்தை திருடியவர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் விசாரணை வலையில் டிடிஎஃப் வாசன், தன்யா மற்றும் கரிஷ்மா என மூன்று பேர் உள்ளனர். இந்த நிலையில் முதலாவதாக தன்யாவை அவர்கள் விசாரணை செய்தனர்.

பிக்பாஸில் போட்டியாளர்களை வெறுப்பேற்றும் டிடிஎஃப் வாசன்:

அதனைத் தொடர்ந்து தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது புரோமோ வீடியோவில் டிடிஎஃப் வாசனை விசாரிப்பது தெரிகிறது. கமிட்டி உறுப்பினர்கள் கேட்கும் கேள்விக்கு டிடிஎஃப் வாசன் நக்கலாக பதிலளித்து வருகிறார். தொடர்ந்து கேள்வி கேட்டும் நபர்களையே சுத்தலில் விடுகிறார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… ரஜினிகாந்த் தனது சொந்த சாதனைகளை அவரே முறியடிக்கிறார் – எஸ்.ஜே.சூர்யா புகழாரம்

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… திருநங்கைகளின் வாழ்வியலைப் பேசும் ‘டோரதி’ திரைப்படம்! படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டிய அமைச்சர் வன்னியரசு

Follow Us