Nani: ஒரு லவ் ஸ்டோரி.. நானியின் புதிய படத்தை இயக்கும் தமிழ் இயக்குநர்? யார் தெரியுமா?
Nani Next Movie: தெலுங்கு சினிமாவில் மக்கள் மத்தியில் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் நானி. இவரின் நடிப்பில் தெலுங்கில் புதிய படங்களானது பிரமாண்டமாக உருவாகிவருகிறது. அந்த விதத்தில் இவர் தமிழ் இயக்குநரின் இயக்கத்தில் காதல் திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளாராம். அந்த இயக்குநர் யார் என விவரமாக பார்க்கலாம்.
தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் நானி (Nani). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்கள் வெளியாகியுள்ளது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் தி பாரடைஸ் (The Paradise). இந்த படத்தை இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கியிருந்த நிலையில், இவருக்கு ஓரளவு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த படத்திற்கு பிறகு இவர் “பிளாடி ரோமியோ” (Bloody Romeo) என்ற திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது தேவைரமாக நடைபெற்றுவரும் நிலையில், அவர் இதில் கேங்ஸ்டராக நடித்துவருகிறாராம். இதை இயக்குநர் சுஜித் (Sujeeth) இயக்குகிறாராம்.
இந்த படத்திற்கு பிறகு நடிகர் நானி சிறப்பான காதல் கதைக்களத்தில் நடிக்கவுள்ளாராம். இதை அவரே நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். அந்த படத்தை பிரபல தமிழ் இயக்குநர் ஒருவர் இயக்குகிறாராம். அவர் யார் என விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: சார் ஒண்ணுமே இல்ல நீங்க… டிடிஃஎப் வாசனிடம் வாய் தகராறில் ஈடுபட்ட அக்ஷிதா – தீயாய் பரவும் ப்ரோமோ!
நானியின் காதல் படத்தை இயக்கும் தமிழ் இயக்குநர்:
நடிகர் நாணி தி பாரடைஸ் பட ப்ரோமோஷன் பணியின்போதே, பிளாடி ரோமியோ படத்திற்கு பின் தான் குழந்தைகளுக்காக ஒரு சிறப்பான காதல் கதையில் நடிக்கலாம் என இருக்கிறேன் என கூறியிருந்தார். அந்த படத்தை இயக்குநர் சி.பிரேம் குமார் இயக்கவுள்ளதாக வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: பூஜா ஹெக்டேவின் பர்த்டே ஸ்பெஷல்… போஸ்டரை வெளியிட்டது ஸ்ரீ ஸ்ரீ படக்குழு!
96, மெய்யழகன் போன்ற திரைப்படங்களை இயக்குநர் பிரேம் குமார்தான் இப்படத்தையும் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் நடிகர் ஃபகத் ஃபாசிலை வைத்து புதிய படம் இயக்கிவரும் நிலையில், இதற்கு பிறகு நானியின் புதிய படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. இதில் நடிகை ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவிவருகிறது.
நானி மற்றும் பிரேம் குமார் கூட்டணி திரைப்படம் குறித்த இணையத்தில் வைரலாகும் பதிவு:
Director #PramKumar has completed shooting for his upcoming film starring #FaFa, which is scheduled for release in December.
After this film, Pram Kumar is set to direct Telugu star #Nani in his next project. #RukminiVasanth is reportedly being considered as the female lead. https://t.co/dREW93NMrw
— Movie Tamil (@_MovieTamil) October 13, 2026
நடிகர் நானி, தற்போது இயக்குநர் சுஜித் இயக்கத்தில் பிளாடி ரோமியோ என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் அவர் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தமிழ் இளம் நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் மலையாள நடிகர் பிரிதிவிராஜ் சுகுமாரன் இப்படத்தில் மெயின் வில்லனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுவர தொடங்கியுள்ளது. அந்த விதத்தில் 2027ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.