AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சார் ஒண்ணுமே இல்ல நீங்க… டிடிஃஎப் வாசனிடம் வாய் தகராறில் ஈடுபட்ட அக்ஷிதா – தீயாய் பரவும் ப்ரோமோ!

Akshitha-TTF Vasan Clash: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தமிழில் வெகு சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. 6வது வாரத்தில் இந்த நிகழ்ச்சியானது இருந்துவரும் நிலையில், இன்று (13/10/2026) வெளியான ப்ரோமோவில் அக்ஷிதா அசோக் மற்றும் டிடிஃஎப் வாசன் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் தீயாக பரவிவருகிறது.

சார் ஒண்ணுமே இல்ல நீங்க… டிடிஃஎப் வாசனிடம் வாய் தகராறில் ஈடுபட்ட அக்ஷிதா – தீயாய் பரவும் ப்ரோமோ!
அக்ஷிதா மற்றும் டிடிஃஎப் வாசன் மோதல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 13 Oct 2026 15:48 PM IST

தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தமிழில் ஒளிபரப்பப்பட்டுவருகிறது. கடந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி முதல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளராக தொகுத்துவருகிறார். இந்நிலையில் 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது தற்போது சிறப்பாக நடைபெற்றுவருகிறது. கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்நிகழ்ச்சியானது தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 36 நாட்களை கடந்துள்ளது. மொத்தம் 18 போட்டியாளர்களுடன் இந்நிகழ்ச்சியானது நடைபெற்றுவரும் நிலையில், பல சுவாரஸ்ய டாஸ்குகளும் இருந்துவருகிறது. இந்நிலையில் 37வது நாளான இன்று (13/10/2026) பிக் பாஸில் அக்ஷிதா அசோக் (Akshitha Ashok) மற்றும் டிடிஃஎப் வாசன் (TTF Vasan) இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

டிடிஃஎப் வாசன் திட்டமில்லாமல் செய்வதாக அக்ஷிதா, ராகவ்விடம் கூறிக்கொண்டிருந்த நிலையில், அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதமாகியுள்ளது. இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: சென்சார் பிரச்சனையில் சிக்கிய ஹரிஷ் கல்யாணின் தாஷமக்கான் படம்? வைரலாகும் தகவல்

பிக் பாஸில் டிடிஃஎப் வாசன் மற்றும் அக்ஷிதா அசோக் இடையே ஏற்பட்ட மோதல்:

இந்த ப்ரோமோவில் அக்ஷிதா, டிடிஃஎப் வாசன் குறித்து சக போட்டியாளரான ராகவ்விடம் கூறிக்கொண்டிருந்தார். உடனே அவர் டிடிஃஎப் வாசன் பக்கத்தில் சென்ற நிலையில், அவரிடம் வாக்குவாதம் செய்ய தொடங்கிவிட்டார். எவ்வளவுதான் சொன்னாலும் உங்களுக்கு மண்டைல ஒன்னும் புரியாது சார் என அவர் டிடிஃஎப் வாசன் குறித்து பேச தொடங்கியிருந்தார். இதனால் மேலும் கடுப்பான டிடிஃஎப் வாசன், அக்ஷிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படிங்க: பத்தா படத்திலிருந்து வெளியானது ஊரோட ஒத்த டான் பாடல் வீடியோ

மேலும் அக்ஷிதாவுக்கு துணியாக முத்தழகியும் பேச தொடங்கியிருந்தார். தற்போது இது தொடர்பான ப்ரோமோ இணையத்தில் தீயாக பரவிவருகிறது . இதில் அக்ஷிதா, டிடிஃஎப் வாசனிடம் தனது பேச்சால் சூறையாடும் நிலையில் இன்றைய பிக் பாஸ் எபிசோட் சிறப்பாக இருக்கும் என தெரிகிறது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 37வது நாளின் 3வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த வாரத்தில் டைமென்ட் திருட்டு தொடர்பான டாஸ்க் தற்போது நடைபெற்றுவருகிறது. அந்த விதத்தில் இந்த டாஸ்க் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த வைரத்தை எந்த போட்டியாளர் திருடுவார் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. அந்த விதத்தில் பிக் பாஸில் இந்த வாரமானது சிறப்பான வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us