AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முன்பதிவில் ஜெயிலர் 2 வசூலித்தது இத்தனை கோடிகளா? வைரலாகும் தகவல்

Jailer 2 Movie Collection In Advance Booking | நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இன்னும் இரண்டு நாட்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது ஜெயிலர் 2 படம். இந்தப் படம் முன்பதிவில் எத்தனை கோடிகள் வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

முன்பதிவில் ஜெயிலர் 2 வசூலித்தது இத்தனை கோடிகளா? வைரலாகும் தகவல்
ஜெயிலர் 2Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Oct 2026 13:09 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் 75 வயதைக் கடந்தும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ள படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தினை இயக்குநர் நெல்சன் திலீப் குமர் எழுதி இயக்கி உள்ளார். படம் வருகின்ற 15-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முதல் பாகத்தைவிட இந்த இரண்டாம் பாகத்தில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தின் டிக்கெட் முன்பதிவு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே தொடங்கியது.

முன்பதிவில் ஜெயிலர் 2 வசூலித்தது இத்தனை கோடிகளா?

இந்த நிலையில் இந்த ஜெயிலர் 2 படத்தின் டிக்கெட் முன்பதிவில் இதுவரை உலக அளவில் ரூபாய் 50 கோடிகள் வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் ரஜினிகாந்த் நடிப்பில் முன்னதாக வெளியான கூலி படத்தின் முன்பதிவை விட இந்த ஜெயிலர் 2 பெரிய அளவில் வசூலிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால் படக்குழு இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… Suriya: வாழ்க்கையிலும் அதை ஒன்ஸ் மோர்-னு எடுத்துக்கோங்க.. ரசிகர்களுக்கு சூர்யா கொடுத்த அட்வைஸ்!

ஜெயிலர் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… முதல் முறை இங்கு நீ இன்றி நடக்கிறேன் தனியாக… 14 ஆண்டுகளைக் கடந்தது சூர்யாவின் மாற்றான் படம்!

Follow Us