Jailer 2: தமிழகத்தில் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் 2 பட FDFS எப்போது தெரியுமா?
Jailer 2 FDFS: ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவும் இந்த 2026ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்த்துவந்த திரைப்படம்தான் ஜெயிலர் 2. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதில் ஹீரோவாக நடித்துள்ள நிலையில், 2026ம் ஆண்டு அக்டோபர் 15 தேதியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இப்படத்தின் FDFS காட்சிகள் எப்போது என விவரமாக பார்க்கலாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth) நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2). இந்த படமானது தலைவர் 172 என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தமிழ் பிரபல இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கியுள்ள நிலையில், சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் தயாரித்துள்ளார். இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “முத்துவேல் பாண்டியன்” என்ற வேடத்திலே நடித்துள்ளார். இந்த படமானது பான் இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.
ஜெயிலர் 2 படமானது பூஜா விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் இப்படத்தின் FDFS எப்போது இருக்கும் என்பது குறித்த தகவல்கள் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: விறுவிறுப்பாக நடைபெறும் அரசன் படத்தின் ஷூட்டிங்… வைரலாகும் அப்டேட்!
தமிழகத்தில் ஜெயிலர் 2 படத்தின் FDFS:
இந்த ஜெயிலர் 2 படமானது பான் இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இதில் ரஜினிகாந்த, எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, விஜய் சேதுபதி, வித்யா பாலன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
இதையும் படிங்க: உயிர் – உலக் உடன் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பேமிலி வெக்கேஷன் – வைரலாகும் கிளிக்ஸ்!
இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு சிறப்பாக தொடங்கியுள்ள நிலையில், கர்நாடகாவில் 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில், காலை 6 மணி ஷோ முதல் திரையிடப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் காலை 8:30 ஷோ முதலே ஜெயிலர் 2 படத்தின் FDFS திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் 2 படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Innaikkum Ennennaikkum Oru Thalaivan dhaan! 🌟
Book your tickets and meet him in theatres on October 15!💥 #Jailer2Book Your Tickets:
🎟️ https://t.co/8BX8nmJcR0🎟️ https://t.co/U8HBuAvxlC
🎟️ https://t.co/JNiGf5zWuH
@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vidya_balan @iam_SJSuryah #MithunChakraborty #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk @sunilreddy22 #PallaviSingh @valentino_suren @Alagiakoothan #SantoshRaju @kabilanchelliah @kuchirayar73 @RIAZtheboss #Jailer2FromOct15
— Sun Pictures (@sunpictures) October 11, 2026
அனிருத்தின் இசையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திலிருந்து முழு ஆல்பமும் வெளியாகியுள்ள நிலையில், பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழும் கிடைத்த நிலையில், வெளியீட்டில் எந்த பிரச்சனைகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நிச்சயம் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.