எஸ்.ஜே. சூர்யா ஒரு நடிப்பு அரக்கன் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
SJ Suryah is an acting beast | தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. இவர் ஒரு நடிப்பு அரக்கன் என்று நடிகர் ரஜினிகாந்த் வெகுவாகப் பாராட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பதன் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. தொடர்ந்து பெயரிடப்படாத கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா பிறகு நடிகர் அஜித் குமாரை வைத்து படம் இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். முதல் படமே நடிகர் அஜித் குமாரை இயக்கும் வாய்ப்பை பெற்றதால் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்தார் எஸ்.ஜே.சூர்யா. அது மட்டும் இன்றி அவர் இயக்குநராக அறிமுகம் ஆன வாலி என்ற படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார் எஸ்.ஜே.சூர்யா. பிறகு படங்களில் அவரே இயக்கி நடிக்கத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தான் இயக்கும் படங்களில் நடித்து வந்த எஸ்.ஜே.சூர்யா பிறகு மற்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார். மேலும் அதிக அளவில் வில்லன் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து வந்தார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஜெயிலர் 2 படத்தில் நடித்து உள்ளார் எஸ்.ஜே.சூர்யா. அவரது நடிப்பு குறித்து ரஜினிகாந்த் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




எஸ்.ஜே. சூர்யா ஒரு நடிப்பு அரக்கன் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்:
எஸ்.ஜே.சூர்யா ஒரு நடிப்பு அரக்கன். அடக் கடவுளே, என்னவொரு அர்ப்பணிப்பும் நேர்த்தியும். நெல்சனிடம் ஒரு டேக் வாங்குவது மிகவும் கடினம். அவர் ஓகே என்று சொன்னால், எனக்கு மிகவும் நிம்மதியாக இருக்கும், ‘ஒரு நாற்காலி எடுத்து உட்காருங்க என்று சொல்வேன்.
ஆனால் நெல்சன் ஓகே என்று சொன்னாலும், எஸ்.ஜே.சூர்யா விடமாட்டார், சின்னச் சின்னத் தவறுகளைச் சுட்டிக்காட்டி இன்னொன்றைக் கேட்பார். நான் நின்றுகொண்டிருந்தேன், ரம்யா கிருஷ்ணனும் நின்றுகொண்டிருந்தார், எனக்கு 75 வயதாகிறது. நிக்க வச்சு பெண்ட் கலடிடங்கா! அப்படியொரு அர்ப்பணிப்புதான் எஸ்.ஜே.சூர்யாவின் அர்ப்பணிப்பு என்று தெரிவித்துள்ளார்.
Also Read… இனிமேல் அந்த மாதிரியான படங்களில் மட்டுமே நடிப்பேன் – நடிகர் சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#SuperstarRajinikanth about #SJSuryah in #Jailer2 Super Show
“#SJSuryah is an acting beast! MY GOD, what a dedication and perfection! Getting a take 🆗 from #Nelson is very tough. If he says okay, I’ll be so relieved and say, ‘Take a chair da and sit down!’
But even if #Nelson says 🆗, #SJSuryah won’t leave and asks for one ☝️ more, pointing out the minor mistakes. I was standing, #RamyaKrishnan was standing, and I am 75 years old! NIKKA VACHU BEND KALATITANGA! Such was the dedication of #SJSuryah!
— Movies Singapore (@MoviesSingapore) October 9, 2026
Also Read… காதல் ப்ரேக்-அப்பிற்கு பிறகு அதுதான் எனக்கு மருந்தாக அமைந்தது – நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!