அன்சருக்கு முனியம்மாள் எழுதிய கடிதம்.. கண்ணீரில் மூழ்கிய அன்சர் குறித்த புரோமோ!
Bigg Boss Tamil 10: தமிழில் மக்கள் மத்தியில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பதுதான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியானது தொடங்கி இன்றோடு கிட்டத்தட்ட 33 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில் என் அன்பிற்கினிய என்ற லெட்டர் எழுதும் டாஸ்க் நடந்த நிலையில், அன்சர் மற்றும் முனியம்மாள் இருவரும் கண்ணீருடன் இருக்கும் புரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் (Vijay Tv) அதிக டிஆர்பி ரேட்டிங் கொண்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பதுதான் பிக் பாஸ் (Bigg Boss) . இந்த நிகழ்ச்சியானது இந்தியில் 2006ம் ஆண்டில் தொடங்கி கிட்டத்தட்ட 20 சீசன்களை கடந்து மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது. மேலும் தமிழில் இந்த நிகழ்ச்சியானது கடந்த 2017ம் ஆனது முதல் ஆரம்பமான நிலையில், இதுவரை மொத்தமாக 9 சீசன்களை கடந்துள்ளது. மேலும் இந்த 2026ம் ஆண்டில் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது நடைபெற்றுவருகிறது. இதை விஜய் சேதுபதி தொகுப்பாளராக தொகுத்துவரும் நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில் இந்த நிகழ்ச்சியானது ஆரம்பமான நிலையில், இன்றுடன் (09/10/2026) வெளியாகி 33 நாட்களான நிலையில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
இன்று “என் அன்பிற்கினிய” என்ற கடிதம் எழுதிய டாஸ்க் நடைபெற்றுவந்தது. அதில் அன்சருக்கு முனியம்மாள் லெட்டர் எழுதியுள்ள நிலையில், அதை படித்து அன்சர் அழுதுள்ளார். இது தொடர்பான புரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: என் அன்பிற்கினிய.. உணர்வுகளால் நிரம்பிவழிந்த பிக் பாஸ் ஹவுஸ் – வைரலாகும் புரோமோ!
என் அன்பிற்கினிய டாஸ்கில் கதறியழுத அன்சர் மற்றும் முனியம்மாள்:
இன்று (09/10/2026) பிக் பாஸில் அந்த அன்பிற்கினிய என்ற டாஸ்க் நடைபெற்றிருந்தது. அதில் தனக்கு பிடித்த நபர்களுக்கு போட்டியாளர்கள் கடிதம் எழுதலாம். அந்த விதத்தில் முனியம்மாள் அன்சருக்காக லெட்டர் எழுதியிருந்தார். அதை அனைவரின் முன்னிலையில் படித்த அன்சர், கதறியழுத்துள்ளார். அவர் படிப்பதை கேட்ட முனியம்மாளும் அளித்திருந்தார். இது தொடர்பான பிக் பாஸ் புரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: ரணபாலி மொக்க… ஜெயிலர் 2 போகலாம்.. இணையத்தில் தனது படத்தை பற்றி பரவும் விமர்சனங்கள் – விஜய் தேவரகொண்டா பேச்சு!
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 33வது நாளின் 3வது புரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day33 #Promo3 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/emUWSPvTQt
— Vijay Television (@vijaytelevision) October 9, 2026
பிக் பாஸ் நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், சிறப்பாக ஒளிபரபாகிவருகிறது. இந்த நிகழ்ச்சி 5வது வாரத்தின் இறுதியில் இருக்கும் நிலையில், விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்திப்பார். இந்த வாரத்திற்கு நோ எவிக்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த முறை யார் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கவே முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.