AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காதல் ப்ரேக்-அப்பிற்கு பிறகு அதுதான் எனக்கு மருந்தாக அமைந்தது – நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Actress Aishwarya Lekshmi talks about breakup | தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் சமீபத்தில் தனது காதல் பிரேக் அப் மற்றும் அதிலிருந்து வெளியேறியது எப்படி என்பது குறித்தும் பேசியது வைரலாகி வருகின்றது.

காதல் ப்ரேக்-அப்பிற்கு பிறகு அதுதான் எனக்கு மருந்தாக அமைந்தது – நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!
ஐஸ்வர்யா லட்சுமிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Oct 2026 08:30 AM IST

மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் பிசியான நாயகியாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கட்டா குஸ்தி 2. நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்து இருந்த இவர் ஒரு கட்டா குஸ்தி வீராங்கனையாக நடித்து இருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து மலையாளத்தில் சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான ஆஷா என்ற படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

தொடர்ந்து வெள்ளித்திரையில் மட்டும் இன்றி நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அவ்வபோது ஓடிடியிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி நடிகர் அர்ஜுன் தாஸ் உடன் இணைந்து நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவான #லவ் என்ற வெப் சீரிஸ் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனது காதல் ப்ரேக் அப் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ப்ரேக்-அப்பிற்கு பிறகு அதுதான் எனக்கு மருந்தாக அமைந்தது:

காதலில் ஏற்பட்ட பிரிவு மற்றும் சில திரைப்பட வாய்ப்புகளை இழந்தது என என் வாழ்க்கையின் ஒரு கடினமான காலகட்டத்தில், சுஷ்மிதா சென் தனக்குத்தானே வைர மோதிரம் ஒன்றை பரிசளித்துக்கொண்டது எனக்கு உத்வேகம் அளித்தது. கார்கள் மீது எனக்கு எப்போதும் மிகுந்த ஆர்வம் இருந்ததால், 2024-ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று இந்தக் காரை வாங்கினேன். இந்தக் காரை நான் எப்படி வாங்கினேன் என்பது குறித்து இணையத்தில் எழுந்த விமர்சனங்களோ அல்லது கேள்விகளோ என்னைப் பாதிக்கவில்லை. இது எனது சொந்த உழைப்பு மற்றும் வெற்றியின் விளைவாகும் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… திருமணம் செய்வதாக ஏமாற்றி தவறாக நடந்துகொண்டார் – பிக்பாஸ் முத்துக்குமரன் மீது இன்ஸ்டா பிரபலம் பகீர் குற்றச்சாட்டு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சேனாதிபதி இஸ் பேக்… கமல் ஹாசனின் இந்தியன் 3 குறித்து அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

Follow Us