காதல் அம்பு உட்டு என்ன செஞ்சிட்டாளே… 10 ஆண்டுகளை நிறைவு செய்தது சிவகார்த்திகேயனின் ரெமோ படம்!
10 Years Of Remo Movie | நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் ரெமோ. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது அதிக அளவில் அழுத்தமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனால் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் தொடர்ந்து காமெடியை மையமாக வைத்து உருவாகும் படங்களிலேயே நாயகனாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 07-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ரெமோ. இந்தப் படத்தினை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் எழுதி இயக்கி இருந்தார். ரொமாண்டிக் காமெடி பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அன்சன் பால், சதீஷ், கே.எஸ்.ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன், ராஜேந்திரன், யோகி பாபு, அருண்ராஜா காமராஜ், ஆடுகளம் நரேன், மயில்சாமி, சுவாமிநாதன், குழந்தை ரக்ஷா சவுகான், கல்யாணி நடராஜன், பிரியதர்ஷினி ராஜ்குமார், ராகுல் தாத்தா, பிரதாப் கே. போத்தன், ஸ்ரீ திவ்யா மற்றும் ராஜு சுந்தரம் உட்பட பலர் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர்.




10 ஆண்டுகளை நிறைவு செய்தது சிவகார்த்திகேயனின் ரெமோ படம்:
இந்தப் படத்தில் தனது காதலியை இம்ரஸ் செய்ய அவரைப் பற்றி அவர் கூடவே இருந்து தெரிந்துகொண்டு அந்தப் பெண்ணை காதலிக்க வைக்க முயற்சி செய்கிறார் சிவகார்த்திகேயன். அப்படி அவர் காதலிக்கும் பெண் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். அவர் ஒரு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றுகிறார். அங்கு பெண் வேடமணிந்து நர்ஸாக வேலைக்கு சேர்கிறார். இப்படி இருக்கும் நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையே காதல் எப்படி ஏற்படுகின்றது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Also Read… Scene: ஆத்தி இவ யார்ரா.. சூர்யாவின் சீன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
From Sivakarthikeyan anna to the unforgettable Remo
10 years later, still one of the most lovable chapters of SK Anna’s journey. 👑❤️
FOREVER REMO. 💕🔥
#10YearsOfRemo #Sivakarthikeyan https://t.co/Ex39iCANtj
— Vimal Raj (@vimalraj9524) October 7, 2026
Also Read… Jailer 2: ஜெயிலர் 2 படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் அப்டேட்.. விவரங்கள் இதோ!