காதல் திருமண வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம்… மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தது இறுகப்பற்று படம்!
3 Years Of Irugapatru Movie | தமிழ் சினிமாவில் உறவுகளை மையப்படுத்தி பலப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வரிசையில் வெளியான இறுகப்பற்று படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
தமிழ் சினிமாவில் அப்பா – மகள், அம்மா – மகன், அண்ணா – தங்கை, அக்கா – தம்பி என உறவுகளை மையமாக வைத்து பலப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதில் அதிக அளவில் பேசப்படாத ஒன்றாக இருப்பது கணவன் – மனைவி உறவு என்று சொல்லலாம். இந்த கணவன் – மனைவி உறவு என்பது அனைத்துவிதமான உணர்வுகளையும் அடங்கிய ஒன்றாக இருக்கின்றது. அப்படி இருக்கும் போது திருமணம் முடிந்து இரண்டு நபர்களாக இருக்கும் போது எப்படி எல்லாம் வாழ்க்கை மாறுகிறது என்பதையும் அவர்களின் உறவை தக்க வைத்துக்கொள்ள என்ன எல்லாம் முயற்சிகளை எடுக்கிறார்கள் என்பதை தமிழ் சினிமாவில் வெளிப்படையாக பேசி ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்த படம் இறுகப்பற்று. இந்தப் படம் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 06-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படத்தினை இயக்குநர் யுவராஜ் தயாளன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் ஷ்ரத்தா ஸ்ரீநாத், விக்ரம் பிரபு, ஸ்ரீ, விதார்த், சானியா ஐயப்பன், அபர்நதி, மனோபாலா, ரெட்ஜெயன்ட் சுப்ரமணி, மை பா நாராயணன், பசி சத்யா, டிங்கு மற்றும் சாப்ளின் சுந்தர் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.




மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தது இறுகப்பற்று படம்:
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக படக்குழு ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Atlee: பத்தா படத்தை ஆஸ்கர் விருதுக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறேன் – அட்லீ பேச்சு!
இறுகப்பற்று படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Three years of #Irugapatru, a heartfelt journey that continues to stay with us. ❤️
A story of relationships, emotions, and the beauty of holding on through every chapter in life. ✨
#3YearsOfIrugapatru
#இறுகப்பற்று https://t.co/m3ymWAl0OB
— Potential Studios LLP (@Potential_st) October 6, 2026
Also Read… வீட்டின் தலைவராக அக்ஷிதா… ஆதரவாக ஜேசன் – எதிர்க்கும் எதிர் அணி – புரோமோ இதோ!