AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வீட்டின் தலைவராக அக்ஷிதா… ஆதரவாக ஜேசன் – எதிர்க்கும் எதிர் அணி – புரோமோ இதோ!

Bigg Boss Tamil 10: தமிழில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருவதுதானா பிக் பாஸ் சீசன் 10. இந்நிகழ்ச்சியின் பிக் பாஸ் வீட்டின் 5வது வாரத்தின் தலைவராக அக்ஷிதா அசோக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் விதிகளுக்கு எதிர் அணி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக எதிர் அணி வெளுத்துவங்கும் புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

வீட்டின் தலைவராக அக்ஷிதா… ஆதரவாக ஜேசன் – எதிர்க்கும் எதிர் அணி – புரோமோ இதோ!
பிக் பாஸ் தமிழ் சீசன் 10Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 05 Oct 2026 21:07 PM IST

பிக் பாஸ் சீசன் 10ன் (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில் ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியானது தொடங்கி கிட்டத்தட்ட 29வது நாட்களான நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. ஆரம்பத்தில் மொத்தம் 19 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இதுவரை மொத்தம் 6 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார். அந்த விதத்தில் 5வது வாரத்தின் தொடக்கத்தில் மூன்று வைல்ட் கார்ட் என்ட்ரியாக (Wild card Entry) அக்ஷிதா அசோக், டிடிஎப் வாசன் மற்றும் கரீஷ்மா போன்ற போட்டியாளார்கள் நுழைந்திருந்தனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டின் 5வது வாரத்தின் தலைவராக அக்ஷிதா அசோக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இவர் டெமாக்ரஸி அரசியில் முதல் முதலாக போட்ட ரூல்ஸ் எதிர் அணியினர் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் அக்ஷிதாவுக்கு ஆதரவு குரலாக ஜேசன் தொடர்ந்து பேசிவரும் நிலையில், எதிர் அணி போட்டியாளர்கள் அவர்களை சாடும் வகையில் உள்ள புரோமோ ஜேசன் பேசுவது குறித்து மற்ற போட்டியாளர்களும் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: இதுக்கா சண்ட.. பிக் பாஸில் ஜேசன் மற்றும் டிடிஎப் வாசனுக்கும் இடையே மோதல் – வைரலாகும் புரோமோ!

அக்ஷிதாவுக்கு ஆதரவாக பேசும் ஜேசனை சாடும் எதிர் அணி போட்டியாளர்கள்:

பிக் பாஸ் வீட்டின் 5வது வாரத்தின் கார்ட் என்ட்ரியாக நுழைந்த அக்ஷிதா அசோக். இன்று (05/10/ 2026) டெமாக்ரஸி அறையில் அக்ஷிதா தலைவராக தனது விதிகளை பிறப்பித்திருந்தார். அதில் அவர் எதிர் அணியினர் எங்கே போனாலும் தங்களின் கையில் தங்களின் வாட்டர் பாட்டிலுடன் செல்லவேண்டும் என் அகூறியிருந்தார். உடனே எதிர் அணியில் இருந்த முனியம்மாள், இதெல்லாம் எவ்வாறு கொண்டு செல்லமுடியும் எங்களால் முடியாதது என கூறினார். உடனடியாக பேசிய ஆளும் அணி உறுப்பினர் ஜேசன், அக்ஷிதாவுக்கு ஆதரவாக பேசியிருந்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!

தொடர்ந்து அக்ஷிதாவுக்கு வாயாக இவர் பேசிய நிலையில், எதிர் அணி உறுப்பினரான முகேஷ், ஜேசன் எனது உங்களை வாயா என் அக்ஷிதாவிடம் கேட்டார். இதற்க்கு அவரை அந்த பதவியில் வைத்துவிட்டு நீங்கள் உறுப்பினராகி இருக்கலாம் என அக்ஷிதாவிடம் அவர் கடுமையாக பேசியிருந்தார். இது தொடர்பான புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 29வது நாளின் 4வது புரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. 5வது வாரத்தில் உள்ள இந்த நிகழ்ச்சியானது, வைல்ட் கார்ட் என்ரியுடன் பரபரப்பாக நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us