ஓடிடியில் வெளியாகி உள்ள லஸ்ட் ஸ்டோரிஸ் 3 படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
Lust Stories part 3 Movie Review Here | இந்தி மொழியில் உருவாகி உள்ள படம் லஸ்ட் ஸ்டோரிஸ் 3. இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து விமர்சனம் இதோ.
வெள்ளித்திரையில் உருவாகும் படங்கள் பல நேரடியாக திரையரங்குகளில் வெளியாகி பிறகு ஓடிடியில் வெளியாகும். ஒவ்வொரு படமும் திரையரங்குகளில் வெளியாகி குறைந்தது 1 மாதத்திற்கு பிறகு ஓடிடியில் வெளியாவது வழக்கமாக உள்ளது. ஆனால் ஒரு சில படங்கள் ஓடிடியில் வெளியாவதற்காகவே உருவாகி வருகின்றது. மேலும் அந்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தி மொழியில் ஆந்தாலஜி பாணியில் உருவாகி முன்னதாக இரண்டு பாகங்கள் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது லஸ்ட் ஸ்டோரிஸ். இந்த நிலையில் தற்போது லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தின் மூன்றாம் பாகம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது. அந்தப் படம் இணையத்தில் ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இந்த ஆந்தாலஜி படத்தினை இயக்குநர்கள் விக்ரமாதித்ய மோத்வானே, கிரண் ராவ், ஷகுன் பத்ரா மற்றும் விஷால் பரத்வாஜ் ஆகியோர் இயக்கி உள்ளனர். மேலும் நடிகர்கள் ராதிகா ஆப்தே, கொங்கோனா சென் சர்மா, விஜய் வர்மா, அபிஷேக் பானர்ஜி, குர்பதே பிர்சாதா, சனா தம்பி, அலி ஃபசல், ராதிகா மதன், அதிதி ராவ் ஹைதாரி, சித்தார்த், அனிருத் சூர்யா, ரஜத் கபூர், விஜய் மௌரியா, கஜராஜ் ராவ், நிவேதிதா பார்கவா, பாக்யஸ்ரீ தர்கே, வைஷாலி பிஷ்ட் மற்றும் அலோக் ஜெயின் உட்பட பலர் இதில் நடித்து உள்ளனர்.
லஸ்ட் ஸ்டோரிஸ் 3 படத்தின் கதை என்ன?
முன்னதாக வெளியான இரண்டு பாகங்களைப் போல இந்த லஸ்ட் ஸ்டோரிஸ் படமும் செக்ஸ் வாழ்க்கை என்பது மனிதர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையே மையமாக வைத்து உருவாகி உள்ளது. ஆந்தாலஜி பாணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் 4 பாகங்களாக உள்ளது. ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு கதையை மையமாக வைத்து உருவாகி உள்ளது.




Also Read… சேயோன் படம் பொங்கலுக்கு வெளியாகாதா? என்ன காரணம்
மேலும் திருமணம் ஆன ஜோடி நடுத்தர வயதில் செக்ஸ் வாழ்க்கையை எப்படி வாழ்கிறார்கள் என்பதும், இளம் ஜோடி காதலிக்கும் போது செக்ஸ் வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்கள், திருமணம் ஆகி குடும்ப சூழலால் விவாகரத்தைப் பெற நினைக்கும் ஜோடிக்கு செக்ஸ் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது குறித்தும் இந்தப் படத்தில் பேசியுள்ளனர்.
மேலும் செக்ஸ் என்பது ஒருவரின் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் இந்தப் படத்தில் வெளிப்படையாக பேசியுள்ளனர். இது முன்னதாக வெளியான பாகங்களைப் போல இல்லாமல் சற்று வித்யாசமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read… நாமினேஷனில் போட்டியாளர்களால் குத்தப்படும் லக்ஷ்மி பிரியா – ஷமா… இனி விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லை!