வசூலில் உலக அளவில் ரூ. 150 கோடியை கடந்தது மண்டாட்டி படம்… தமிழ் நாட்டில் மட்டும் எத்தனை கோடிகள் தெரியுமா?
Mandaadi Movie Box Office Collection | நடிகர் சூரி நாயகனாக நடித்து இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மண்டாட்டி. இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் வசூலில் இதுவரை எத்தனை கோடிகளைப் பெற்றுள்ளது என்பது குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூரி. இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் சூரியின் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் 10-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கி உள்ளார். ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ். இன்ஃபோடெய்ண்ட் என்ற நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து உள்ளார். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே தொடர்ந்து விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூரி உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் உலக அளவில் அதிக வசூலைப் பெற்றுள்ளது.




வசூலில் உலக அளவில் ரூ. 150 கோடியை கடந்தது மண்டாட்டி படம்:
அதன்படி இந்த மண்டாட்டி படம் திரையரங்குகளில் வெளியாகி 25 நாட்களைக் கடந்துள்ள நிலையில் படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த மண்டாட்டி படம் உலக அளவில் ரூபாய் 150 கோடிகளை வசூலித்துள்ளது. அது மட்டும் இன்றி தமிழ் நாட்டில் மட்டும் மண்டாட்டி படம் இதுவரை 100 கோடி ரூபாயை கடந்து வசூலில் சாதனைப் படைத்துள்ளது என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… ஒன்று சேர்ந்தால் மட்டும் தான் காதலா? 8 ஆண்டுகளை நிறைவு செய்தது விஜய் சேதுபதி – த்ரிஷாவின் 96 படம்!
நடிகர் சூரி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
The #Mandaadi Victory is getting more thunderous! 🔥💥
The Biggest Blockbuster of the Year, #Mandaadi, has crossed ₹100+ Crores Gross in Tamil Nadu, while the Worldwide Gross has surpassed ₹150+ Crores! 🔥
The #Mandaadi Vaigaiyara Celebrations are only getting BIGGER! ⚓💥 The Thiruvizha continues! 🥁🔥
#BlockbusterMandaadi is Running Successfully in Theatres 🎬🔥
@sooriofficial #Suhas #Sathyaraj @Mahima_Nambiar
@RavindraVijay1 @MithunJS5
@bala_actor @Kritika_Bala
@elredkumar
@rsinfotainment @MathiMaaran @gvprakash @PeterHeinOffl @dhilipaction @maheshmathewMMS @pavijaypoet #VMmahalingam @JayashreeRD @ra_vaaheesan #AmeerJamalKhan @Azarchoreo @srkathiir @KiranDrk @pradeepERagav @magesh_ggg #thiralsankar @MohanaVasanthan @mani_rsinfo @dineshmoffl
#Ronexxavier #srinath
@AKunjamma @ikrishhassan @mudwayrecords @ProRekha #digitallypowerful— Actor Soori (@sooriofficial) October 5, 2026
Also Read… அனைத்திலும் சிறந்த படைப்பாக அமைந்துள்ளது டோரதி – பாராட்டி தள்ளிய இயக்குநர் அஜய் ஞானமுத்து