பிக்பாஸில் கடந்த வாரம் ஜாவித் பேச்சால் கிளம்பிய சர்ச்சை… நேற்றைய எபிசோடில் விளக்கமாக பேசிய விஜய் சேதுபதி
Bigg Boss Tamil Season 10 | தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் என்ற விமர்சனம் மக்களிடையே இருக்கும் நிலையில் ஜாவித் கடந்த வாரம் பேசியது உறுதி செய்வது போல அமைந்தது. அதுகுறித்து நேற்றையை எபிசோடில் விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து மக்களிடையே இது ஸ்கிரிப்ட்டாக இருக்கும் என்றும் போட்டியாளர்களின் செயல்கள் இயல்பாகவே இல்லை ஆக்ஷன் என்றதும் நடிப்பது போலவும் கட் என்றதும் அடுத்த விசயத்திற்கு செல்வது போல உள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சி 24 மணி நேரம் ஒளிபரப்பானதில் இருந்தே இந்த கருத்து நிலவுவது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழியில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பார்வையாளர்களிடையே இந்த கருத்து நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த கருத்து எல்லாம் உண்மை என்பது போல இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் ஒரு நாள் ஜாவித் தன்யாவிடம் பேசும் போது நிகழ்ச்சி குழு சொன்னதால்தான் செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி லீடர் எக்ஸிட் முறையில் இரண்டாவது வாரம் வெளியேறிய ஜாவித் கடந்த மூன்றாவது வார இறுதியில் மீண்டும் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது ஒரு போட்டியாளரை தேர்வு செய்து அவர்களுடன் கையைக் கட்டிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். அப்படி தேர்வு செய்யும் நபர்களை நிகழ்ச்சி குழு அறிவுறுத்தியதன்படி முடிவு செய்ததாக தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
Also Read… படப்பிடிப்பை நிறைவு செய்தது மரகத நாணயம் 2 படக்குழு – வைரலாகும் வீடியோ!




பிக்பாஸில் கடந்த வாரம் ஜாவித் பேச்சால் கிளம்பிய சர்ச்சை:
இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் நடிகர் விஜய் சேதுபதி வாரம் முழுவதும் நடந்த விசங்களை பேசினார்ன். இறுதியாக இந்த விசயம் குறித்து ஜாவித்திடம் கேள்வி எழுப்பினார். அப்போது ஜாவித் தான் கூறியது தவறு, நிகழ்ச்சி குழு எதுவும் சொல்லவில்லை நான் தான் தன்யாவை தேர்வு செய்த முடிவு செய்தேன் என்று தெரிவித்தார். மேலும் தன்யாவை குழப்புவதற்காக அந்த டாஸ்கின் போது நான் அப்படி பேசினேன் என்று ஜாவித் கூறினார். இது எந்த அளவிற்கு உண்மை என்று ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… ஜெயிலர் 2 படத்தின் கதைச்சுருக்கம் இதுதானா? வைரலாகும் தகவல்