பிக்பாஸில் தன்யாவை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்… வைரலாகும் வீடியோ!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது பிபி ஹோட்டல் டாஸ்க் நடைப்பெற்று வருகின்றது. இந்த டாஸ்கில் தன்யாவை மற்ற போட்டியாளர்கள் ஒட்டுமொத்தமாக கடுப்பேற்றும் வீடியோ இணையத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சின்னத்திரையில் தற்போது ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று வருகின்ற ஒரு நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10). இந்த நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு முதல் தொடங்கியது. இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து போட்டியாளர்களிடையே போட்டி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே போட்டிக்கு பஞ்சமே இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி மூன்று வாரங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 4-வது வாரம் சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நேற்று நடைப்பெற்ற பணப்பெட்டி டாஸ்கில் 5 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு குமரன் போட்டியை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் தற்போது 17 போட்டியாளர்கள் மீதம் உள்ளனர்.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஹோட்டல் டாஸ்க் நடைப்பெற்று வருகின்றது. அதில் பிக்பாஸ் வீடு பிபி ஹோட்டலாக மாறி வீட்டில் உள்ள போட்டியாளர்கள் விளையாடி வந்தனர். இதுவரை விருந்தினராக இருந்த போட்டியாளர்கள் ஹோட்டல் ஊழியர்களாக தற்போது மாறி உள்ளனர்.




பிக்பாஸில் தன்யாவை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்:
அதன்படி தற்போது வெளியான புரோமோபடி வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் தன்யா மீது இருந்த ஒட்டுமொத்த கடுப்பையும் கொட்டி வருகின்றனர். அதன்படி விருந்தினராக இருந்த போது தன்யா மற்ற போட்டியாளர்களை அதிக அளவில் வேலையை செய்ய வைத்து கடுப்பேற்றிய நிலையில் தற்போது இவர்கள் மீண்டும் தன்யாவை கடுப்பேற்றுகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… பிக்பாஸில் பணப்பெட்டியை எடுக்க இதுதான் காரணம்… உடைந்து அழுத குமரன் – கண்ணீரில் மூழ்கிய ஹவுஸ்மெட்ஸ்!
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day25 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #BiggBossTheTurningPoint #BBTurningPoint #TheTurningPoint #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #VijayTV… pic.twitter.com/HESkG1EpjG
— Vijay Television (@vijaytelevision) October 1, 2026
Also Read… 4 ஆண்டுகளைக் கடந்தது பொன்னியின் செல்வன் படம் – கொண்டாடும் ரசிகர்கள்