AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மீண்டும் தொடங்கியது ப்ரோ க்ளப் படத்தின் ஷூட்டிங்… வைரலாகும் தகவல்

Bro Club Movie Shooting Update | நடிகர்கள் ரவி மோகன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் அர்ஜுன் அசோகன் நடிப்பில் உருவாகும் ப்ரோ க்ளப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த செய்தி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

மீண்டும் தொடங்கியது ப்ரோ க்ளப் படத்தின் ஷூட்டிங்… வைரலாகும் தகவல்
ப்ரோ க்ளப்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Sep 2026 21:22 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவரது நடிப்பில் அடுத்தடுத்து தொடர்ந்து 3 படங்கள் உருவாகி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. ஒரு பக்கம் ரவி மோகன் நடிப்பில் உருவாகும் படங்கள் தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் அடுத்ததாக அவரது இயக்கத்தில் மற்றும் தயாரிப்பில் உருவாகும் படங்கள் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அந்த வகையில் ரவி மோகன் இயக்குநராக அறிமுகம் ஆகும் படம் அன் ஆர்டினரி மேன். இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபு படத்தின் நாயகனாக நடித்து உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்தப் படத்தை ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனம் தான் படத்தை தயாரித்து இருந்தது.

அதனைத் தொடர்ந்து ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிக்கும் படம் ப்ரோ க்ளப். இந்தப் படத்திற்கு முன்னதாக ப்ரோ கோட் என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது. அது சிக்கலை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து தற்போது படத்திற்கு ப்ரோ க்ளப் என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தின் அறிமுக வீடியோ வெளியான போதே அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.

மீண்டும் தொடங்கியது ப்ரோ க்ளப் படத்தின் ஷூட்டிங்:

இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் யோகி எழுதி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர்கள் ரவி மோகன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் அர்ஜுன் அசோகன் நாயகன்களாக நடித்து உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா, உபேந்திர லிமாயே மற்றும் ஐஸ்வர்யா ராஜ் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி இந்த ப்ரோ கோட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் 6 நாள் நடைபெற உள்ளதாகவும் அதைத் தொடர்ந்து தாய்லாந்தில் 60 நாள் படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த செய்தி தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வேகமாகப் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… வெளியேற்ற இதெல்லாமே பண்ணுவாங்க.. வார்த்தைகளால் குமாரனை காயப்படுத்தும் லக்ஷ்மி பிரியா – வைரலாகும் புரோமோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Jailer 2: ரெடியா?.. ஜெயிலர் 2 படத்தின் பேக் டூ பேக் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

Follow Us