AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Jailer 2: ரெடியா?.. ஜெயிலர் 2 படத்தின் பேக் டூ பேக் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

Jailer 2 Movie Updates: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள புதிய திரைப்படம்தான் ஜெயிலர் 2. இந்த படம் 2026ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியாகின்ற நிலையில், இதன் ட்ரெய்லர் முதல் 3வது பாடல் வரையிலான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

Jailer 2: ரெடியா?.. ஜெயிலர் 2 படத்தின் பேக் டூ பேக் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!
ஜெயிலர் 2Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 29 Sep 2026 11:44 AM IST

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவபருப்பவர் ரஜினிகாந்த் (Rajinikanth) இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இவரின் நடிப்பில் இறுதியாக கூலி(Coolie) திரைப்படமானது வெளியானது. கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் விமர்சனங்கள் ரீதியாக நெகடிவாக பேசப்பட்டாலும், வசூல் ரீதியாக வெற்றியானது. இந்த படத்திற்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் 172வது திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளதுதான் ஜெயிலர் 2 (Jailer 2). இந்த திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கியுள்ள நிலையில், தயாரிப்பாளர் கலாநிதிமாறன் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு தென்னிந்திய ராக்ஸ்டார் அனிருத் (Anirudh) இசையமைத்துள்ளார்.

இவரின் இசையில் இந்த படத்தின் பாடல் மற்றும் பின்னணி இசையும் சிறப்பாக அமைந்துள்ளது. அந்த விதத்தில் இந்த படமானது 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் வெளியாகவுள்ளது. அந்த விதத்தில் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டை படக்குழு மொத்தமாக வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஸ்ரீ ராமரின் அவதாரம்.. ரன்பீர் கபூரின் ராமாயணா படத்தின் BTS வீடியோ வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 பட பேக் டூ பேக் அப்டேட்:

ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் ஒன் நேம் என்ற மூன்றாவது பாடல் 29 செப்டம்பர் 2026ம் ஆண்டிலும், 4வது பாடல் செப்டம்பர் 30ம் தேதியிலும், ஆல்பம் வெளியீடு செப்டம்பர் 30ம் தேதியிலும், சன் நெஸ்ட்டில் ராவே அக்டோபட் 3ம் தேதியிலும், சன் டிவியில் ராவே அக்டோபர் 4ம் தேதியிலும் மற்றும் ஜெயிலர் 2 படத்தின் ட்ரெய்லர் வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதியிலும் வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையயும் படிங்க: ஆடியோ லான்ச் இல்லையா? ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் முழு ஆல்பம் எப்போது வெளியாகும்?

ஜெயிலர் 2 படத்தின் பேக் டூ பேக் அப்டேட் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

ஜெயிலர் 2 படத்தின் ரஜினிகாந்த் முன்னணி நட்சத்திரமாக நடித்திருக்கும் நிலையில், அவருடன் சுராஜ் வெஞ்சாரமூடு, வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, சிவராஜ்குமார், மோகன்லால், விநாயகன் மற்றும் பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் 2026ம் ஆனது அக்டோபர் 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அதை முன்னிட்டு தற்போது இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us