Ramayana: ஸ்ரீ ராமரின் அவதாரம்.. ரன்பீர் கபூரின் ராமாயணா படத்தின் BTS வீடியோ வெளியீடு!
Ramayana Movie BTS: பான் இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் காவிய திரைப்படம்தான் ராமாயணா. இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட படத்தின் ராமராக ரன்பீர் கபூர் நடித்துள்ளார். இந்நிலையில் இவரின் கதாபாத்திர BTS வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர்தான் ரன்பீர் கபூர் (Ranbir kapoor). இவரின் நடிப்பில் ஹாலிவுட் அளவுக்கு உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் ராமாயணா (Ramayana). இந்த படமானது இந்துக்களின் புராணக் கதையான இராமாயணத்தின் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி (Nitesh Tiwari) இயக்கியுள்ள நிலையில், உலகளவில் மிகவும் பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சோனி பிக்ச்சர் உள்ளிட்ட பல்வேறு பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் ரன்பீர் கபூர் ஸ்ரீ ராமராக நடித்துள்ள நிலையில், சாய் பல்லவி (Sai Pallavi) சீதா தேவியாக நடித்துள்ளார். மேலும் ரவி துபே லட்சுமணனாக நடித்துள்ளார். இந்த படமானது 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு உலகமெங்கும் வெளியாகும் என கூறப்படுகிறது.
அந்த விதத்தில் இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரன்பீர் கபூரின் BTS வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் ரன்பீர் கபூர் ராமனாக நடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டுளார் மற்றும் சவால்கள் செய்துள்ளார் என்பது குறித்து இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.




இதையும் படிங்க: அதுக்குள்ள ஓடிடியிலா? கார்த்தியின் சர்தார் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது!
இணையத்தில் வைரலாகும் ரன்பீர் கபூரின் ராமாயணா படத்தின் BTS வீடியோ எக்ஸ் பதிவு:
#Ramayana Asset Out Now! 🎬✨
Here is the special surprise for Ranbir Kapoor’s birthday!
The asset is officially out now. Go check it out on the official Ramayana handles and celebrate the day with us! 🔥🙏 https://t.co/cIcgKvE5Mh pic.twitter.com/K0pf6I86hc
— M4MOVIES (@m4moives_) September 28, 2026
விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராமாயணா படக்குழு:
ராமாயணா திரைப்படத்தில் ரன்பீர் கபூர் நடித்திருந்த ராமர் கதாபாத்திரத்திற்கு AI பயன்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுவந்த நிலையில், அவரின் கதாபாத்திரம் உண்மையாகவே எடுக்கப்பட்டுள்ளது என இந்த வீடியோ மூலம் தெரிகிறது. இந்த படமானது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த ராமாயணா படத்தில் நிறைய CG பயன்படுத்தியுள்ளனர். இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில், ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஒன் நேம்… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தின் 3வது பாடல் ரிலீஸ் அறிவிப்பு!
மேலும் 2வது ட்ரெய்லர் வெளியாகவும் வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. இதில் ராவணனான யாஷ் நடித்துள்ளார். இவரின் கதாபாத்திரத்தின் இந்த படத்தில் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது. இப்படமானது வரும் 20276ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகும் என கூறப்படுகிறது. நிச்சயம் இப்படம் உலகமெங்கும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.