Meesaya Murukku 2: 4 நாட்களில் ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு 2 படத்தின் வசூல் இவ்வளவா? அதிகாரபூர்வமாக வெளியான அப்டேட்!
Meesaya Murukku 2 4th Day Collection: தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என பல்வேறு பணிகளை செய்துவருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் மீசைய முறுக்கு 2. இந்த படமானது வெளியாகி கிட்டத்தட்ட 4 நாட்களான நிலையில், அதிகாரபூர்வமாக எவ்வளவு வசூல் செய்துள்ளது என் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் இசையமைப்பாளராக அனைவராலும் அறியப்படுபவர் ஹிப்ஹாப் ஆதி (Hiphop Aadhi). இவர் வெறும் இசையமைப்பாளர் மட்டுமல்ல தமிழ் சினிமாவில் அனைவராலும் அறியப்படும் நடிகராகவும் இருந்துவருகிறார். கடந்த 2017ம் ஆண்டில் சுந்தர் சி (Sundar C) தயாரிப்பில் வெளியான மீசைய முறுக்கு (Meesaya Murukku) என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். இந்த படத்தில் வெறும் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் இவருக்கு ஹீரோவாகவும், இயக்குநராகவும் மாபெரும் வெற்றியை கொடுத்திருந்தது. இந்த படத்திற்கு பிறகு மற்ற இயக்குநர்களின் இயக்கத்திலும் நடிகராக போணியாற்றியிருந்தார். கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள பார்ட் 2 படம்தான் மீசைய முறுக்கு 2 (Meesaya Murukku 2). இதை ஹிப்ஹாப் ஆதி இயக்கி, நடித்து, இசையமைத்துள்ளார்.
இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படமானது மக்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், இதுவரை மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: இதுக்கு பொய் சீரியஸ்-ஆ.. வெங்கட் பிரபுவின் பதிவுக்கு ரிப்ளை செய்த சிவகார்த்திகேயன்!
4 நாட்களில் ஹிப்ஹாப் ஆதியின் மீசையமுறுக்கு 2 படத்தின் வசூல் :
மீசையமுறுக்கு 2 படத்தில் ஹிப்ஹாப் ஆதி கிட்டத்தட்ட 3 வேடங்களில் நடித்துள்ளார். அவருடன் நடிகைகள் ரம்யா ரங்கநாதன், சைத்ரா ஆச்சார் மற்றும் கெட்டிகா ஷர்மா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் ஹர்ஷத் கான், கருணாஸ் மற்றும் பாபா பாஸ்கரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதுக்குள்ள ஓடிடியிலா? கார்த்தியின் சர்தார் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது!
இந்த படமானது வெளியாகி கிட்டத்தட்ட 4 நாட்களான நிலையில், இதுவரை மொத்தமாக சுமார் ரூ 51.3 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஹிப்ஹாப் ஆதியின் மீசையமுறுக்கு 2 படத்தின் வசூல் குறித்து வெளியான எக்ஸ் பதிவு:
Idhu just numbers illa… namma padathukku kedacha pure love ❤️
₹51.3 CR and counting! 🔥#MM2Blockbuster #ConcertInTheatres #HiphopTamizha @hiphoptamizha @khushsundar #AvniCinemax @benzzmedia #ACSArunKumar @TheKetikaSharma @Chaithra_Achar_ @RamyaRanganathn @Harshatheee… pic.twitter.com/b20BjeqHZy— Avni Cinemax (@AvniCinemax_) September 28, 2026
இந்த படமானது மக்கள் மத்தியில் திரையரங்குகளில் மக்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றிருவருகிறது. இந்த படத்தின் பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்றுவரும் நிலையில், திரையரங்குகளில் ரசிகர்களை சந்தித்துவருகிறார். அந்த விதத்தில் இந்த படமானது விரைவில் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலை பெரும் என வட்டாரங்கள் கூறுகிறது.